mkp anand vijay tv hot star - விஜய் டிவியில் மாகாபா ஆனந்த் பிடித்திருப்பது அவ்வளவு சாதாரண இடமல்ல - இளைஞர்களுக்கு பெஸ்ட் இன்ஸ்பிரேஷன்
மா கா பா ஆனந்த் என்றாலே அவரது டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். அதிலும், ஆர்.ஜே. மா கா பாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Advertisment
ஆர்.ஜே.வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை ஆரம்பித்த மாகா பா இன்று தொட்டிருக்கும் உச்சம் என்பது மிகப் பெரியது .
இதுகுறித்து அவரே அளித்த பேட்டி ஒன்றில், ஊர்ல இருந்து ஏதாவது சாதிக்கணும்னு சென்னைக்குப் பெட்டி படுக்கையுடன் வந்தவங்களில் நானும் ஒருத்தன். பத்து வருஷம் ஆர்.ஜே, அப்புறம் விஜய் டிவியில ஆங்கர், இப்போ நடிப்புனு ஓடிட்டு இருக்கேன். பல அவமானங்கள், தோல்விகளை எல்லாம் சந்திச்சு 'நண்பன்' படத்துல சொல்ற மாதிரி 'லைஃப் இஸ் எ ரேஸ்'னு வேகமா ஓடிட்டு இருக்கேன்.
ஒரு காலக் கட்டத்துல லவ் ஃபெயிலியராகி தாடி எல்லாம் வெச்சுட்டு சுத்திட்டு இருந்த சமயம். அப்போ என் நண்பன் சின்னையாதான், 'நம்ம மத்தவங்க பின்னாடி சுத்திட்டு இருக்கிறதை விட நம்மகிட்ட நீங்க என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்கும்னு சொல்ற அளவுக்குப் பெரிய லெவலுக்குப் போகணும்'னு சொல்லிட்டே இருப்பான். வாழ்க்கையில பெரிய ஆளாகணும்னா ஒண்ணு பணம் வேணும், இல்லைனா புகழ் வேணும்னு தோணுச்சு. ஒரு ஆஃபிஸுக்குப் போய் வேலை செஞ்சு பணம் சம்பாதிக்கிற அளவுக்குப் பொறுமை கிடையாது. அதனால, நம்ம ஆர்.ஜே ஆனா சரியா இருக்கும்னு தோணுச்சு.
மூணு வருஷமா வாய்ப்பு தேடி ஒரு வழியா கிடைச்சு அதுக்குள்ள பத்து வருஷம் ஓடிடுச்சு ப்ரதர். சரி, டிவியில வாய்ப்பு தேடுவோம்னு தேட ஆரம்பிச்சேன். நிறைய இடங்கள்ல என்னை உள்ளேயே விடலை. அப்புறம், என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் விஜய் டிவியில ப்ரோட்யூசரா இருந்தார். அவர் மூலமாதான் ஒரு 20 நிமிஷ நிகழ்ச்சியில கொஞ்ச நேரம் மட்டும் வர வாய்ப்பு கிடைச்சுது. அந்தக் கொஞ்ச நேரம் கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்திக்கணும்னு ப்ளான் எல்லாம் பண்ணி பாராட்டு வாங்குனேன். அப்படியே கிடைக்கிற வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்தணும்னு ஓடி ஒடி இப்போ இந்த இடத்துல நிக்குறேன்" என்று தனியார் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுவும், டிடி போன்ற பல ஆளுமையான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்த நேரத்தில், விஜய் டிவியில் மாகாபா இவ்வளவு தூரம் வளர்ந்தது என்றது சாதாரணமான விஷயமே அல்ல.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news