modi birthday : இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி. இரண்டாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தனது பிறந்த நாளை தாய் மண்ணான குஜராத்தில் தனது தாயுடன் கொண்டாட முடிவு செய்தார்.
திட்டமிட்டப்படி நேற்று இரவே குஜராத் மாநிலம் அஹமதாபாத் சென்று விட்டார். அங்கு தனது மலரும் நினைவுகளுடன் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பாஜக தலைவர்கள் உட்பட தேசிய தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் அனைவரும் காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் மோடி பிறந்தநாளை இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.தனது 17 வயதில் வீட்டை விட்டி வெளியேறி பொதுவாழ்வில் ஈடுப்பட்ட மோடி தனது 69 அகவையை அடைந்து விட்டார். உலக நாட்டு தலைவர்கள் மத்தியில் மோடி என்றால் அப்படி ஒரு ரீட்ச். 34 ஆண்டுகள் பாஜகவில் மோடியின் பங்கு ஏராளம். கடைக்கோடி தொண்டனாக தொடங்கிய அவரின் பயணம் இன்று பிரதமர் பதவி வரை சென்றுள்ளது.
மோடியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக மோடிஜியின் அரிதான புகைப்படங்களை இங்கே காட்சிபடுத்தியுள்ளோம்.
1. மோடிக்கு 1967 விருப்பம் இல்லாத திருமணம் செய்து வைத்ததாகவும், அதனை துறந்து அவர் கட்சி பணியில் ஈடுப்பட்டதாக ஒரு செய்தி உலா வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் உண்மை நிலை இப்போது வரை யாருக்கும் தெரியாது.
2. 2001-ம் ஆண்டு மோடிக்கு திருப்புனையான வருடம். முதலில் பாஜகவின் பொதுச்செயலாளர் பதவி அடுத்த குஜராத் முதல்வர் என அடுத்தடுத்த பதவிகள் தேடி வந்தன.
3. 8வது வயதிலேயே,ஆர் எஸ் எஸ் இல் உறுப்பினராக சேர்ந்தார் மோடி. பின்னர்,குஜராத் பல்கலை கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
4. 2014 மே 26இல் இந்திய நாட்டின் பிரதமராக 'நரேந்திர மோடி' பதவியேற்றார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார்.
5. அரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார்.சக்தி பாவ் (2015),சமூக நல்லிணக்கம்(2015),ஜோதி பூனா(2015),சமாஜிக் சம்ரஸ்தா (சமூக நல்லிணக்கம் என்ற நூலின் குஜராத்தி மொழிப்பெயர்ப்பு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
6. ஆரம்ப கல்வியினை குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகரில் பயின்ற இவர் விடுமுறை நாட்களில் மற்றும் ஓய்வு நேரங்களில் ரயில் நிலையத்தில் உள்ள அவரது தந்தையின் டீ கடைக்கு சென்று அவருடன் உதவியாக வேலை செய்யும் பழக்கத்தினை வைத்திருந்தார்.
7. 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தான் வகித்து வந்த குஜராத் முதல்வர் பதவியினை ராஜினாமா செய்த மோடி ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ மூலம் பிஜேபி மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் மூலம் பிரதமராகும் பிரகாசமான வாய்ப்பினை பெற்றார். இதற்காக அவர் நாடு முழுவதும் நடந்த மொத்தம் 430 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.