கோவை மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பெனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பா.ஜ.க சார்பில் திங்கட்கிழமை (மார்ச் 18) ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ரோடு ஷோ நிறைவடையும் ஆர்.எஸ் புரம் பகுதியில் சிறிது நேரம் மக்களிடையே உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோடு ஷோ, நடைபெறும் வழி முழுவதும் பாஜகவினர் ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் UMT ராஜா மோடியை வரவேற்கும் விதமாக பா.ஜ.கவின் சின்னமான தாமரையில் மோடியின் உருவத்தை வரைந்து WELCOME MODIJI எனவும் மலர்ந்த முகமே வருக! எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“