குரங்கு பி வைரஸ்: அறிகுறிகள் – தடுப்புமுறை – சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு நபர் குரங்குடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்தால் அல்லது குரங்கு கடித்தால் அல்லது கீறப்பட்டிருந்தால், அவர்கள் தொடர்ந்து சோப்பு அல்லது அயோடின் மூலம் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தொடர்ந்து கழுவ வேண்டும்.

Monkey B virus, new virus counts death in china, Monkey B virus takes one death in china, குரங்கு பி வைரஸ், மங்கி பி வைரஸ், குரங்கு பி வைரஸ் அறிகுறிகள், குரங்கு பி வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு, சீனாவில் குரங்கு பி வைரஸ், குரங்கு பி வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைகள், Monkey B virus infection Monkey B virus symptoms, Monkey B virus transmission, Monkey B virus prevention, Monkey B virus treatment

உலகம் முழுவதும் மக்கள் தொடர்ந்து கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிற நிலையில், சீனாவில் ஒரு புதிய வைரஸ் தொற்று பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் 53 வயதான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் குரங்கு பி வைரஸால் பாதிக்கப்பட்டு இறுதியில் மே மாதத்தில் இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி, “பெய்ஜிங்கைச் சேர்ந்த ஒரு கால்நடை மருத்துவர், குரங்கு பி வைரஸ் (பி.வி) பாதிக்கப்பட்டதன் மூலம் சீனாவின் முதல் மனித நோய்த்தொற்று என உறுதிப்படுத்தப்பட்டார். கோவிட்-19 தொற்று தொடர்பாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் அவர் புதிய வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டார்.” என்று தெரிவித்துளது. மேலும், குளோபல் டைம்ஸ் குறிப்பிடுகையில், சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையத்தின் ஆங்கில தளத்தை மேற்கோள் காட்டி, “மார்ச் மாத தொடக்கத்தில் இறந்த இரண்டு குரங்குகளை அவர் அறுவை செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

இந்த குரங்கு பி வைரஸ் (Monkey B virus) என்னும் புதிய வைரஸைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள, அது பரவும் முறை, அறிகுறிகள், நோயால் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து தெரிந்துகொள்ள நாங்கள் நிபுணர்களை அணுகினோம்.

“குரங்கு பி வைரஸ் மிகவும் அரிதான வைரஸ் தொற்று ஆகும். இது ஹெர்பெஸ் வைரஸின் குழுக்களில் ஒன்றாகும். இது பாரம்பரியமாக மாகாக்ஸ், சிம்பன்சிகள் மற்றும் கபுச்சின் போன்ற பல வகையான குரங்குகளில் காணப்படுகிறது” என்று ஆசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் கோவிட் நிபுணர் மற்றும் மருத்துவ சேவைகளின் ஆலோசகர் டாக்டர் சாரு தத் அரோரா கூறினார்.

ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் உள்ளக மருத்துவத்தின் கூடுதல் இயக்குநர் டாக்டர் பெலா சர்மா கூறுகையில், “இது ஒரு பொதுவான வைரஸ் அல்ல, அதே நேரத்தில் இது மிகவும் ஆபத்தானதும் அல்ல” என்று கூறினார். மேலும், இது ஒரு விலங்கியல் வைரஸ் ஆகும். இது முக்கியமாக விலங்குகளுக்கு பரவுகிறது. அதோடு மனிதர்களை அரிதாகவே பாதிக்கிறது” என்று அவர் கூறினார்.

டாக்டர் அரோரா கருத்துப்படி, 1932ம் ஆண்டு முதல் உலகில் குரங்கு பி வைரஸ் தொற்று 60-80 தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

வைரஸ் பரவும் முறை

இந்த வைரஸ் உடல் திரவங்கள், முக்கியமாக உமிழ்நீர், சிறுநீர், இரத்தம் மற்றும் குரங்கிலிருந்து சில மூளை திரவங்கள் உடலில் படும்போது பரவுகிறது. முக்கியமாக துளி தொற்று மூலம் பரவுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுவரை மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதாக அறிவிக்கப்படவில்லை” என்று டாக்டர் அரோரா indianexpress.com இடம் கூறினார்.

கால்நடை மருத்துவர்கள், பிளம்பர்ஸ், கட்டுமானத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் காடுகளில் பணிபுரியும் மக்கள், குரங்குகளிடமிருந்து கடி அல்லது கீறல் பெற்றவர்கள் இந்த வைரஸ் பாதிப்பதற்கான ஆபத்தில் உள்ளனர் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அறிகுறிகள்

*உடல் வலி

*தசை வலி

*மூக்கு அடைப்பு

*மூக்கு ஒழுகுதல்

*கண்களில் நீர் ஒழுகுதல்

*குறைந்த உடல் வெப்பநிலை

“வைரஸ் மூளை மற்றும் முதுகெலும்புகளில் பாதிக்கும்போது நோயாளிகளின் நினைவாற்றலில் சிரமம், தசை ஒருங்கிணைப்பு, தசை அசைவுகள் மற்றும் மூளையின் மங்கலான நினைவு போன்ற நரம்பியல் அறிகுறிகளைக் காட்டத் தொடங்குவார்கள். சில நேரங்களில், இது என்செபலிடிஸ் அல்லது மூளை வீக்கத்திற்கு வழிவகுக்கும், இது ஆபத்தானது” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சி.டி.சி கருத்துப்படி ஒரு நபர் குரங்கு பி வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒரு மாதத்திற்குள் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கலாம். ஆனால், அறிகுறி மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் தோன்றக்கூடும்.

தடுப்பு மற்றும் சிகிச்சை

“குரங்கு பி வைரஸுக்கு திரவ சிகிச்சை மட்டுமே சிகிச்சை” என்று டாக்டர் அரோரா கூறினார். ஒரு நபர் குரங்குடன் ஏதேனும் தொடர்பு கொண்டிருந்தால் அல்லது கடித்தால் அல்லது கீறப்பட்டிருந்தால், அவர்கள் தொடர்ந்து சோப்பு, சோப்பு அல்லது அயோடின் மூலம் அந்த பகுதியை கழுவ வேண்டும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். கடுமையான அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Monkey b virus know its symptoms transmission prevention and cure

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com