ஒரு வாரத்திற்கு முன்பு, உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மை அல்லது mpox ஐ உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. பொது சுகாதார அமைப்புகளில் கோவிட்-19 பேரழிவை ஏற்படுத்திய 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
குரங்கம்மை நோய்க்கு இன்னும் மருந்து இல்லை, ஆனால் பொதுவாக பெரியம்மை நோய்க்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே இந்த நோய்களும் ஒரே மாதிரியானவை என்று அர்த்தமா?
குரங்கம்மை மற்றும் பெரியம்மை ஆகியவை தொடர்புடையதாக இருந்தாலும், அவை வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுவதாகவும், தனித்துவமான மருத்துவ அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் டாக்டர் மனிஷா அரோரா விளக்கினார். (Director – Internal Medicine at the CK Birla Hospital, Delhi)
குரங்கம்மை, மங்கிபாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது, பெரியம்மை வரியோலா வைரஸால் ஏற்படுகிறது. இரண்டும் ஆர்த்தோபாக்ஸ் (Orthopoxvirus) வைரஸ் வகையைச் சேர்ந்தவை என்றாலும், குரங்கம்மை பொதுவாக பெரியம்மை நோயை விட லேசானது.
குரங்கம்மையில் நிணநீர் அழற்சி அல்லது வீங்கிய நிணநீர் கணுக்கள் இருப்பது, இரண்டு நோய்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாகும். இது பெரியம்மையில் ஏற்படாது. 1980 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒழிக்கப்படுவதற்கு முன்னர், பெரியம்மை நோயுடன் ஒப்பிடும்போது குரங்கம்மை குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. பெரியம்மை அதிக காய்ச்சலையும், கடுமையான சொறியையும் உண்டாக்குகிறது, மேலும் அடிக்கடி மரணத்திற்கு இட்டுச் செல்கிறது.
அதே சமயம் குரங்கம்மை தீவிரமானதாக இருந்தாலும், பொதுவாக மிகவும் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.
குரங்கம்மை நோய்க்கு பெரியம்மை தடுப்பூசி ஏன் பயன்படுத்தப்படுகிறது?
/indian-express-tamil/media/media_files/h7eb53KeOB919niipXKA.jpg)
குரங்கம்மை நோய்க்கு குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் உருவாக்கப்படவில்லை. இருப்பினும், மங்கி பாக்ஸ் வைரஸுக்கும் வரியோலா வைரஸுக்கும் (பெரியம்மை உண்டாக்கும்) நெருங்கிய தொடர்பு காரணமாக, பெரியம்மை தடுப்பூசி குரங்கம்மைக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது, என்று டாக்டர் அரோரா விளக்கினார்.
இரண்டு வைரஸ்களும் ஒரே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்படுகிறது. கௌபாக்ஸ் வைரஸிலிருந்து தயாரிக்கப்படும் பெரியம்மை தடுப்பூசி, குரங்கம்மை தடுக்க அதிக ஆபத்துள்ள மக்களில் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கிறது, இருப்பினும் இது பொதுவாக பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
குரங்கம்மை நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள்
குரங்கம்மை மற்றும் பெரியம்மை இரண்டிற்கும் எதிரான பாதுகாப்பில் நிலையான வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அடங்கும் என்று டாக்டர் அரோரா கூறினார்:
அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் இந்த வைரஸ்கள் பரவாமல் தடுக்கலாம்
பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து விலகி இருப்பது மற்றும் வைரஸைக் கொண்டு செல்லக்கூடிய விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்ப்பது (கொறித்துண்ணிகள் அல்லது விலங்குகள் போன்றவை) பரவும் அபாயத்தைக் குறைக்கும்.
பெரியம்மை அழிக்கப்பட்டாலும், வழக்கமான தடுப்பூசிகள் நடைமுறையில் இல்லை என்றாலும், பெரியம்மை தடுப்பூசியானது குரங்கம்மை தடுக்க குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அல்லது மக்கள் தொகையில்.
இந்த தடுப்பு உத்திகள் மிக முக்கியமானவை, குறிப்பாக நோய் அதிகமாக உள்ள பகுதிகளில். பெரியம்மை இனி ஒரு அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், குரங்கம்மையை எவ்வாறு தடுப்பது என்பதைப் புரிந்துகொள்வது அதன் பரவலைக் கட்டுப்படுத்த இன்றியமையாதது.
Read in English: An expert answers: Why smallpox vaccine is being prescribed for those with monkeypox
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“