மான்டெக் போன்றோரின் சீர்திருத்தம் என்பது உயர் மட்டத்தினருக்கானது என்று எளிதாக புறம்தள்ளிவிடலாம். அவர்களின் தீர்மானத்தில் பிழை இருக்கிறது. ஆனால், ஏழைகள் என்ற பெயரில் சத்தமாக கத்தும் பெரும்பாலானவர்களை விடவும், இந்தியர்கள் மீது பெரும்பாலும் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
பிரதாப் மானு மேத்தா
புத்தகத்தின் பெயர்; பின்னணி; இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளுக்கு பின்னால் உள்ள கதை(Backstage: The Story Behind India’s High Growth Years)
எழுத்தாளர்; மான்டெக் சிங் அலுவாலியா
பதிப்பகம்; ரூபா இந்தியா
பக்கங்கள்; 464
விலை; ரூ.595
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
1985-ம் ஆண்டு நான் இளநிலை பட்டப்படிப்பு படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு வந்த முதல் நாளிலேயே, எனது பொருளாதார ஆசிரியர் என்னிடம், மான்டெக் சிங் அலுவாலியா பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா என்று கேட்டார். நான் ஒரு அசிங்கமான முறையில் இல்லை என்று சொன்னேன். அந்த தருணம், ஏதோ ஒரு தேர்வில் தோல்வியடைந்துவிட்டேனோ என்ற தொணியில் இருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் மிகவும் புத்திசாலியான மாணவர்களில் மான்டெக்கும் ஒருவர் என்று எனக்கு அவர் தெரிவித்தார். “உங்களுக்குத் தெரியுமா. அவர் மிகவும் தேச பக்தி மிக்கவர்.உங்கள் நாட்டை மாற்ற உலக வங்கி வேலையை விட்டு வந்தார். அவரால் முடியாவிட்டால், யார் ஒருவராலும் முடியாது.” மான்டெக் (உலகம் முழுவதும் இப்படித்தான் அழைக்கப்படுகிறார்) ஏற்கனவே, தரத்தை நிர்ணயித்து விட்டார். அதில் சிலவற்றை அளவிட முடியும். சில வழிகளில், பின்னணி என்பது, நேர்கொண்ட பார்வையின் புகழ்பெற்ற, புத்திசாலிதனமான,தன்னம்பிக்கை நிகழ்வுகளாக இருக்கிறது மற்றும் பொருளாதார வல்லுநராக, தனது சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தியாவில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களிலும் பங்கேற்றார். இந்த நிகழ்வுகளின் மாற்றங்களான இந்தியபொருளாதாரம், சீரமைப்புக்குப்பின்னர் இரண்டாம்தரமான செயலாக்கத்தில் இருந்து வளர்ச்சி இயக்கவியலை நோக்கிச் சென்றது.
நிகழ்வுகள் என்ற வகையில், மூன்று ஒற்றை நல்லொழுக்கங்களைக் கொண்டிருந்தது. முதலாவதானது, குறிப்பிடத்தக்க நிலைத்தன்மை மற்றும் அதன் தெளிவில் புத்திசாலித்தனமான கண்ணோட்டத்தை கொண்டிருந்தது. ஒரு காலகட்டத்தில், பொருளாதார மறுசீரமைப்பு குறித்து பின்வரும் தலைமுறையினர் மிகவும் இணக்கமாக இருந்தனர். ஏற்றுக்கொள்ளும் குணமாக இருக்கும் இது, மான்டெக்கிற்கு விரிவான சரியான யோசனையை கொடுத்தது. தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை நம்பிக்கை ஓட்டாக இருந்தது. அவைகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே திறன் மிக்க இந்தியர்களின் அமைதியான நம்பிக்கை எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் உயர்ந்தது. மான்டெக் போன்றோரின் சீர்திருத்தம் என்பது உயர் மட்டத்தினருக்கானது என்று எளிதாக புறம்தள்ளிவிடலாம். அவர்களின் தீர்மானத்தில் பிழை இருக்கிறது. ஆனால், ஏழைகள் என்ற பெயரில் சத்தமாக கத்தும் பெரும்பாலானவர்களை விடவும் இந்தியர்கள் மீது பெரும்பாலும் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அந்த சீரமைப்பின் செயல்பாடுகளை முக்கியமான தருணங்களின் படிப்படியான நிலையை இந்தபுத்தகம் தெளிவாக கொடுக்கிறது. மற்றும் குறிப்பாக1991-ம் ஆண்டு வரையிலான கட்டமைப்பு பயனுள்ளதாக இருக்கும். இரண்டாவதாக, திருட்டுத்தனமான சீர்திருத்தம் என்ற ஒரு கதை மையமாக இது இருக்கிறது. பெரும்பாலான இந்திய வரலாற்றில் சீரமைப்பு என்பது, ஒரு கொரிலா போரைப் போன்றே இருந்திருக்கிறது. நீருக்குள் இருக்கும் மீனைப்போல மக்களுக்கு மத்தியில் இயங்கும் கொரிலாக்களாக மாவோவின் அறிவுரையை உபயோகிப்பதை மான்டெக் ஒப்புதல் அளித்தார். இதன் அர்த்தம் என்ன என்பது பற்றி தெளிவாக இருப்பது முக்கியம். இந்த நிகழ்வில், பாசங்கு அல்லது போலி நிலைகளை குறிப்பதாக இருக்கக் கூடாது. மாறாக இது இதையெல்லாம் தெரிந்து கொள்வதைப் போன்றது. எப்போது வலியுறுத்த வேண்டும், எப்போது தயக்கமாக இருக்க வேண்டும், ஒரு நிகழ்வை எப்போது மேற்கொள்ள வேண்டும், போரில் பாதி வென்றாலும் கூட எப்போது திருப்தியடைய வேண்டும். இது, மான்டெக்கின் ஒற்றை நல்லொழுக்கமாக தோற்றமளிக்கிறது.
மூன்றாவதாக, அங்கே தனிப்பட்ட அடக்கம் இருக்கிறது. இந்த புத்தகம் இந்தியாவின் கதையைச் சொல்கிறது. பல்வேறு கொள்கை வகுப்பாளர்களின் சிற்றின்ப ஆர்வத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில விடுவிப்பதாக இருக்கிறது. தவிர இது நன்றாக இருப்பது பற்றிய ஒற்றை கடைமையை, எதிரிகளை உருவாக்கக் கூடாது என்ற தீர்மானத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் தீவிர இடதுசாரிகளின் லேசான அறிவு சார் எரிச்சலைத் தவிர, இந்த புத்தகம் எந்த ஒரு பாதகமான அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட யாரைப்பற்றியும் பாதகமாகச் சொல்லவில்லை. மன்மோகன் சிங்கை கட்டுப்படுத்துவதற்காக, காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்து அங்கே ஒரு மறைமுகமான விமர்சனம் மெல்லிய குரலில் எழுந்தது. தவிர அங்கே, ஒரளவு ஆர்வமுள்ள அசாதாரண சூழலில் வி.பி.சிங் இருந்தார். நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவராக, இந்த சீரமைப்பு கட்டுரையில் அவர் ஒரு ஆச்சர்யகரமானவராக இருக்கிறார். இரண்டு அத்தியாயங்களிலும், கட்சியின் புத்திசாலி தனங்களில் நேரத்தைச் செலவழிப்பதில் இருந்து விலகி முக்கியமான தருணத்தில் காந்தி எப்படி கேள்விகளை எழுப்பினார்,
ஆனால், சில வழிகளில் மான்டெக்கின், நல்லொழுக்கங்கள் அவர் ஒரு பகுதியாக இருந்த அமைப்பில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தி எந்தவித நோக்கமும் இன்றி முடிந்தது. புத்திசாலித்தனமான தெளிவு, நிலைத்தன்மை சில நேரங்களில் விமர்சனங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற பரிசாகவும் வரும். இடதுசாரி புத்திசாலித்தனத்தின் கட்டமைப்பை பற்றி, மான்டெக் முழுவதுமாக சரியாக இருப்பார். அபாயகரமான பலவீனமான இந்திய முறை வளர்ச்சி என்பதானது கல்வி, சுகாதாரத்தில் அதன் மோசமான தோல்வியைக் கொண்டிருக்கிறது என்று விவாதிப்பவர்களுக்கு, அவர் குறிப்பிடுகிறார். ஒப்பீட்டளவில் குறுகிய மாற்றத்தைத் தருகிறார். ஒரு வேளை மிகவும் ஆச்சர்யகரமாக, யாராவது ஒருவர் ஏற்றுமதி மற்றும் கட்டமைப்பு குறித்து அதிகநேரம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கே, அது தொடர்பான சிறிதளவு உண்மையை ஏற்றுக் கொள்வது, அந்த சீரமைப்புகளின் தேர்வு, பலர் நினைத்தது போல, இந்தியாவுக்கான ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு அதிகம் வெற்றிதருவதாக இல்லை. நம்மை போட்டித்தன்மைக்கு உள்ளதாக்கும், முன் நிபந்தனைகள் இல்லாமல் உலகளாவிய பொருளாதாரத்தில் நாம் இணைந்திருக்கின்றோம். இதன் விளைவாக இந்தியாவில் முன்கூட்டியே தொழில்துறை செயல்பாட்டின் திறன் குறைந்ததா? நமது உண்மையில் கடினமான எண்ணம் கொண்டவராக பின்னடைவாக இருந்தால் அறிவார்ந்த தெளிவு வருமா?
தமது சாதனைகளை பிரசாரம் செய்யாததன் காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அதன் பெருமை கொஞ்சமாகத்தான் கிடைத்தது என்று மான்டெக் சரியாக சிந்தித்திருக்கிறார். அது பிரதமர் தனிப்பட்டமுறையில் தன்னடக்கமாக இருந்ததனால் மட்டும் அல்ல. அனைத்து நேர்மையிலும், நரேந்திரமோடி ஆதாயமான நம்பகத்தன்மையை பெறுவதற்காக தமக்குத்தானே ஒரு கதையை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்வதற்கு அந்த விவரிப்புகள் பொருத்தமற்றதாக இருகும் என்று நினைத்தது. ஆனால், பிரச்னை மேலும் ஆச்சர்யகரமானதாக இருந்ததா? புத்திசாலித்தனம், கொரில்லா போர் உத்திகள், தனிப்பட்ட கண்ணியமும் மென்மை ஆகியவற்றின் கவர்ச்சிகரமான சேர்க்கை. வெறுப்பற்ற பற்றின்மையை கொண்டிருந்தால் மட்டுமே அரசாங்கத்தில் பணியாற்ற முடியும். அதிர்ச்சி என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் மட்டும், 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை சொல்லப்பட்டிருந்தது. படுகொலைகளுக்கு மத்தியில் அருண்சோரி, மான்டெக்கின் பெற்றோரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதை குறிப்பிடுகிறார். ஆனால், பெரும்பாலும் அனைத்து விஷயங்களிலும், பின்னோக்கியவற்றிலும் கூட, ஆபத்தான முட்டாள் தனத்தை கண்டிப்பதில் ஒரு மிகுந்த தயக்கம் இருக்கிறது. இந்த விஷயம் தனிப்பட்ட வீண்விவாதங்களைக் கொண்டதல்ல. இது கொள்கைகளைக் கணக்கில் வைத்திருக்கிறது.
ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் இரண்டாவது காலகட்டம் தடம் புரண்டு விட்டது எனபதை மான்டெக் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணமானவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர் என்று அவர் குறிப்பால் உணர்த்துகிறார். பிரதமரும் அவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பொருளாதாரத்தை அழிக்கும் பந்தை பிரணாப் முகர்ஜி, எடுத்துச் சென்றபோது, மான்டெக் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள். ரிசர்வ் வங்கியின் அந்தஸ்தை குறைத்தல் என்ற எளிய வாக்கியமாக அது இருக்கிறது. வங்கிகளுக்கான ஒரு சுதந்திரமான கட்டுப்பாட்டாளரான ரிசர்வ் வங்கி தமது வேலையை நன்றாகவே செய்து கொண்டிருந்தது என்று மான்டெக் வாதிட்டார். நமது மோசமான ஒழுங்குமுறை தோல்விகளில் ஒன்று ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை இருக்கிறது என்பது இப்போது தெளிவாகி விட்டது.
இந்திய வங்கிகளின் ஒழுங்கு முறைபோல பேரழிவு தரக்கூடிய ஒன்றை, விலை உயர்ந்த கற்கள் பதிப்பவன் பற்றில்லாமல் பணியாற்றுவது போல ஆழ்ந்து சிந்திக்க முடியுமா? அப்போது கொரில்லா போர் யாரையும் புண்படுத்தாதற்காக இன்னொரு மாற்றாக இருகக முடியுமா அந்த இடம் வரை சீரமைப்பாளராக இருப்பது, நிறுவனமாக இருப்பது இரண்டுக்கும் இடையேயான கோடு அர்த்தமற்றதாக மாறி விடுகிறதா? இன்ப துன்ப கோட்பாட்டின் இறுதி விலை கொரில்லா வீரர்களின் சீர்திருத்தமாக இருக்கிறது. ஸ்தாபனத்தின் ஊழல் மற்றும் சோம்பலில் இருந்தும் வேறுபடுத்துவது கடினமாகிவிட்டது. ஆனால், எதுவாக இருந்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாது காலகட்டத்தின் முடிவில், வழியில் சில போட்டியாளர்கள் இருந்தாலும், இந்த புத்திசாலித்தனமான சீரமைப்பாளர் இந்தியா நல்லதாக மாற உதவினார் என்ற உண்மையில் இருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.