/tamil-ie/media/media_files/uploads/2020/12/maxresdefault-1-4.jpg)
mookuthi murugan wife super singer mookuthi murugan : சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை பலருக்குள் ஒளிந்திருக்கும் இசை ஆர்வத்தையும், பாடும் திறமையையும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வருடமும் வெளிக்கொண்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி இது அனைவரும் அறிந்த ஒன்றே.
‘சூப்பர் சிங்கர்’. சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் அடங்குவர்.இந்த நிகழ்ச்சியின் சீனியர் பிரிவின் 7-வது சீஸன் இறுதிப்போட்டி,கோவையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்தது.
மூக்குத்தி முருகன் என்று அழைக்கப்படும் முருகன், முதல் பரிசைப் பெற்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கூறியபடி அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.முருகனுக்கு அவ்வளவு எளிதாக இந்த மேடை கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் முருகன்.மூக்குத்தி முருகன் இவர் ஒவ்வொரு பாடலுக்கு ஏற்ற மாதிரியே தனது தோற்றத்தை மாற்றி அதற்கேற்றவாறு பாடியதால் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
அவரின் இந்த வெற்றிக்கு முழு காரணம் அவரின் திறமை மட்டுமே. அதுமட்டுமில்லை. டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ராதாவையும் இம்ப்ரெஸ் செய்திருக்கிறார். ’நீ தானா அந்தக் குயில்’ பாடலைப் பாடியவாறு, மேடையில் ராதாவை அப்படியே வரைந்து பரிசளித்தார் முருகன். திக்கு முக்காடியா ராதா, முருகனை வெகுவாக பாராட்டினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us