சுவை, ஆரோக்கியமான பாசிப் பருப்பு புட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – 2 கப்
வெல்லம் – அரை கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
ஏலக்காய்த் தூள்- 1 டீஸ்பூன்
நெய்- தேவையான அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும். தண்ணீர் வடித்து பருப்பு நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லியாக வேக வைத்து எடுக்கவும்.
இப்போது இட்லியை உதிர்த்தி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இப்போது
உதிர்த்தி வைத்த இட்லியில் வெல்லம் சேர்த்து உதிரி உதிரியாக இருக்கும்படி கிளறவும். அடுத்து இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அவ்வளவு தான் ஆரோக்கியமான பாசிப் பருப்பு புட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“