மோர்கிளி ரெசிபி செம்ம சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் ரவை
1 கப் அரிசி மாவு
1 டீஸ்பூன் உப்பு
பெருங்காயம்
5 கப் மோர்
3 ஸ்பூன் நல்லெண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
7 மோர் மிளகாய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, பெருங்காயம், உப்பு, மோர் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். இனியொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிந்ததும், மோர் மிளகாய்களை சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து தயாரித்து வைத்த கலவையை சேர்த்து கட்டியாகும் வரை கிளரவும். இதை நாம் வெயிட்லாஸ் செய்ய சாப்பிடலாம். அதேவேளையில் சுவையாக இருக்கும்.