Advertisment

சுலபமான வேலை... சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க!

Buttermilk recipe: மிக குறைந்த நேரத்தில் எளிமையான ரெசிபி என்பதால், பேச்சிலர்களுக்கு இது ரொம்பவே வரப்பிரசாதம்.

author-image
WebDesk
New Update
சுலபமான வேலை... சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க!

mor kuzhambu making video

Mor kuzhambu tamil, mor kuzhambu making video: கொஞ்ச நேரத்துல வேலை முடியணும்... சுவையா இருக்கணும்... உடலுக்கு நல்லதாகவும் பக்க விளைவுகள் இல்லாததாகவும் இருக்கணும்! புடிங்க, நீங்க தேடுற ரெசிபி, மோர்க் குழம்புதான்!

Advertisment

மிக எளிமையான செய்முறை கொண்ட மோர்க் குழம்பு உடலுக்கு குளிர்ச்சியானது. வயிற்று உபாதைகளை தடுக்கும் தன்மை கொண்டது. மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ கொடுத்து அனுப்பத் தக்கது.

இந்த எளிமையான மோர்க் குழம்பை செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.

மோர்க் குழம்புக்கு தேவையான பொருட்கள் : மோர் - 1 கப், தேங்காய் - சிறிதளவு, தனியா - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கடுகு - 1 டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, வரமிளகாய் - 1, தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

mor kuzhambu making: மோர்க் குழம்பு செய்முறை :

மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பிறகு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு தயார்.

மிக குறைந்த நேரத்தில் எளிமையான ரெசிபி என்பதால், பேச்சிலர்களுக்கு இது ரொம்பவே வரப்பிரசாதம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment