மதுரை கோரிப்பாளையத்தில் இன்று கள்ளழகரை தரிசித்த மகிழ்வான தருணத்தை மோர்சா தலைவரும், சிறுபான்மையினரின் முக்கிய பேச்சாளருமான வேலூர் இப்ராகிம் பகிர்ந்துள்ளார்.
மத நல்லிணக்கத்தின் நோக்குடன், இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் பங்கேற்க முயன்ற வேலூர் இப்ராகிம், காவல்துறையால் தடுக்கப்பட்டதாக தெரிவித்தார். எனினும், தொடர்ந்து மேற்கொண்ட உரையாடல் மற்றும் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டினை காவல்துறை புரிந்துகொண்டதனால், இன்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக வேலூர் இப்ராகிம் கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/8f540822-a16.jpg)
"மத நல்லிணக்கத்திற்கும் ஆன்மீக நம்பிக்கைக்கும் வலுசேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்று உறுதியுடன் தெரிவித்த வேலூர் இப்ராகிம், சமூக ஒற்றுமையின் மேம்பாட்டிற்காக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வு, மதத்திற்கு அப்பாலான அன்பும் புரிதலும் நிரம்பிய சமூகத்திற்கான முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.