மன அழுத்தமானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது; குறிப்பாக, பெண்களுக்கு! வேலையையும் வீட்டையும் சவாலாக ஒருசேர கவனிப்பதால் அவர்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. தாங்கி நிற்பதற்கு எதுவும் இல்லையென்றால் அவர்களை மோசமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. குழந்தைகளை கவனிப்பதாலும் வீட்டுக்குள்ளும் வெளியிலும் நிகழும் நடப்புகளாலும் மன அழுத்தம் வருகிறது. ஆகையால், அவர்களின் பணிச்சுமையை ஆண்கள் பகிர்ந்துகொள்வதை அதிகரிப்பது முக்கியம்.
புதியதொரு ஆய்வில், கணிசமான பெண்கள் தங்கள் பிள்ளைகளைவிட கணவனே மன அழுத்தம் வருவதற்கு கூடுதல் காரணமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதற்காக, 7 ஆயிரம் பெண்களிடம் கருத்துக்கேட்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், சராசரியாக 10-க்கு 8.5 எனும் அளவில் மன அழுத்தம் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் 46 % பேர் அவரவர் பிள்ளைகளைவிட கணவர்களையே இதன்பொருட்டு குற்றம்சாட்டுகின்றனர்.
அந்த ஆய்வின்படி, அவர்களுக்கு கணவனைவிட வீட்டின் மூத்த பிள்ளையே ஒரு இணையான துணையாக விளங்குவதாக, அதாவது வேலைச்சுமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதன் மீது ஒரு கண் வைக்கவும் அவர்களுக்கு இது ஒரு காரணமாகிறது. அதைக் கண்காணித்தபடி இருப்பதாலும் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
தந்தைக்கான மன அழுத்தத்தைவிட தங்களுடையது மாறுபட்டது என ஏராளமான பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்காக என வரும்போது, கூட்டாகச் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய காரியங்களில் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதை இது தடுக்கிறது. இது இன்னமும் மன அழுத்தத்தைக் கூட்டுகிறது. பெரும்பாலான பெண்கள், பெற்றோருக்கான அதிகபட்சமான பொறுப்பும் தங்களிடமே விடப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர். அவை எல்லாவற்றையும் செய்ய நேரம் இல்லாமல் கடந்துசெல்வதாகவும் ஆகிறது.
நிறைய ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வதும் வாழ்க்கைத்துணைவருக்கு உதவுவதும் உண்மைதான்; இன்னும் அதிகமாகச் செய்யும்போது பெண்களுக்கு மன அழுத்தம் குறையும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 1,500 தந்தையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில், அதிகமானவர்கள் தாங்கள் பிள்ளைகளுக்காக நிறைய பங்களிப்பதாகவும் ஆனால் அது கணக்கில்கொள்ளப்படுவது இல்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.