நாம் இரவில் தூக்கம் வரும்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் விழித்துக்கொள்வோம். இந்நிலையில் அடிக்கடி இரவில் தாகம் எடுத்தால், நம் உடம்பில் பல்வேறு குறைபாடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நீங்கள் அதிக தண்ணீர் தினமும் குடிக்காமல் இருந்தால் இது ஏற்படும் . ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். சற்று குளிரான இடங்களை தேர்வு செய்து உறங்க வேண்டும்.
மேலும் டிப்ரஷனை தடுக்கும் மாத்திரைகள், வலித்தடுப்பு மருந்துகள் போன்ற சில மாத்திரைகளை எடுத்துகொள்வதால் கூட நமக்கு அடிக்கடி தாகம் எடுக்கலாம்.
தூங்கும்போது வாயால் மூச்சுவிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, உதடு வரண்டு போகும். இதனால் தாகம் எடுக்கும். மாதவிடாய் நிற்கப்போகும் பெண்கள், மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு ஹார்மோன்களின் வேறுபாடு ஏற்படும். இரவில் வியர்வை வழிவது, அதிக தாகம் எடுக்கும் நிலை ஏற்படும்.
நமது உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால், அதை நமது உடல் சரியான செயலாக்கம் செய்ய முடிவதில்லை. இந்த சர்க்கரை வெளியேற்ற உங்கள் சிறுநீரகம் அதிக சுறுநீரை வெளியேற்றும், இதனால் அதிக தாகம் எடுக்கும்.
சென்ரல் மற்றும் நெஃப்ரோஜெனிக் டயபடிஸ் இன்சிபிடஸ் என்பதால் நாம் பாதிக்கப்படும் போது வாசோபிரசின் உற்பதி மற்றும் உள்வாங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது.
வாசோபிரசின் என்பது ஆன்டிடையூரிடிக் ஹார்மோன். இதுதான் நமது உடலில் உள்ள நீர் தன்மையை சீராக்குகிறது. இதனல அதிகபடியான சுறுநீர் வெளியேறும். இதனால் கடுமையான தாகம் எடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“