காலைக் குளியல்! தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த வினோத பழக்கம்? டாக்டர் சிவராமன்

இரவு முழுவதும் நாம் உறங்கும்போது, நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இரவு நேரம் முழுவதும் பித்தம் உடலில் சேரும் பகுதி. நாம் காலையில் எழுந்தவுடன், அந்த பித்தத்தின் சூட்டைக் குறைக்க வேண்டும்.

இரவு முழுவதும் நாம் உறங்கும்போது, நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இரவு நேரம் முழுவதும் பித்தம் உடலில் சேரும் பகுதி. நாம் காலையில் எழுந்தவுடன், அந்த பித்தத்தின் சூட்டைக் குறைக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Head bath benefits

Head bath benefits Dr Sivaraman

காலை எழுந்தவுடன் குளிப்பது ஏன் தமிழர்களின் வழக்கமாக இருக்கிறது என்று யோசித்ததுண்டா? உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த பழக்கம், ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை பரவலாக உள்ளது? இதற்கான பதிலை சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன், ஒரு சுவாரஸ்யமான காரணத்துடன் விளக்குகிறார்.

Advertisment

பித்தத்தைக் குறைக்கும் தந்திரம்

இரவு முழுவதும் நாம் உறங்கும்போது, நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இரவு நேரம் முழுவதும் பித்தம் உடலில் சேரும் பகுதி. நாம் காலையில் எழுந்தவுடன், அந்த பித்தத்தின் சூட்டைக் குறைக்க வேண்டும்.

அதை எப்படி குறைப்பது? தலையில் குளிர்ந்த நீரை ஊற்றுவதன் மூலம், உடலில் சேர்ந்த பித்தத்தின் சூடு தணிகிறது. இதனால்தான் நம் முன்னோர்கள், காலையில் குளிப்பதை ஒரு முக்கியமான தினசரி செயலாக வைத்திருந்தனர். நவீன மருத்துவமும், காலையில் குறிப்பிட்ட சில சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிப்பதாக சொல்கிறது. இது நம் பாரம்பரிய பழக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

Advertisment
Advertisements

shampoo

தலைக்குக் குளித்தல்

நாம் குளிப்பது என்றால், தலையில் தண்ணீர் ஊற்றுவதுதான் உண்மையான குளித்தல். கழுத்து, இடுப்பு என்று மற்ற பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஊற்றினால் அது முழுமையான குளித்தல் ஆகாது. குளித்தல் என்பது தலைக்குக் குளிப்பதுதான்.

சிலருக்கு சளி பிடித்துவிடுமோ என்ற பயம் இருக்கலாம். அவர்கள் தங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு, உடலின் ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருட்கள், அதாவது டர்க்கி டவல் அல்லது வேறு சில துணிகளைப் பயன்படுத்தி ஈரத்தை உடனடியாக போக்கலாம். இதன் மூலம், தலையில் குளிப்பதன் நன்மைகளை முழுமையாகப் பெற முடியும். தலைக்குக் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: