Advertisment

சைலண்ட் கில்லர்: காலையில இந்த 5 அறிகுறிகளை புறக்காணிதீங்க- எச்சரிக்கும் மருத்துவர்

காலை ரத்த அழுத்த அளவீடுகள், உங்கள் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தைப் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Morning blood pressure

5 silent warning signs of high blood pressure in the mornings

பெரும்பாலும் சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படும் உயர் ரத்த அழுத்தம், உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும்.

Advertisment

ஆனால் காலை ரத்த அழுத்த அளவீடுகள், உங்கள் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தைப் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இங்கு டாக்டர் சமீர் வி பகட் (Senior Consultant-Interventional Cardiologist at Gleneagles Hospitals, Parel) காலை ரத்த அழுத்தத்தின் முக்கியத்துவத்தையும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாத அமைதியான எச்சரிக்கை அறிகுறிகளையும் விளக்குகிறார்.

நமது ரத்த அழுத்தம் இயற்கையாகவே நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருக்கும். இருப்பினும், எழுந்தவுடன் தொடர்ந்து அதிகமாக இருப்பது, அதாவது காலை உயர் ரத்த அழுத்தம் (morning hypertension) என்று அழைக்கப்படும் ஒரு நிலை, கவலைக்குரியதாக இருக்கலாம்.

இது உங்கள் உடலின் இயற்கையான தாளம், மன அழுத்த ஹார்மோன் அளவுகள் மற்றும் தூக்க தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படலாம் என்று டாக்டர் பகாட் கூறுகிறார்.

எப்போதாவது ரத்த அழுத்தம் அதிகரிப்பது சாதாரணமாக இருந்தாலும், தொடர்ந்து அதிகமாக இருப்பது, உங்கள் உடலின் இயற்கையான ரத்த அழுத்த ஒழுங்குமுறையை சீர்குலைக்கும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களைக் குறிக்கலாம்.

அமைதியான காலை எச்சரிக்கை அறிகுறிகள்

 உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை, எனவே உங்கள் நல்வாழ்வில் நுட்பமான மாற்றங்களுக்கு கவனம் செலுத்துவது முக்கியமானது, குறிப்பாக காலை வேளையில்.

டாக்டர் பகாட் குறிப்பிடும் 5 அமைதியான எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே:

morning hypertension

தொடர்ந்து காலை தலைவலி: உயர் ரத்த அழுத்தம், உங்கள் ரத்த நாளங்களை கஷ்டப்படுத்தி, எழுந்தவுடன் தலைவலிக்கு வழிவகுக்கும்.

மூக்கிலிருந்து ரத்தக் கசிவுகள்: உங்கள் மூக்கில் உள்ள மென்மையான ரத்த நாளங்கள் அதிக அழுத்தம் காரணமாக உடைந்து, மூக்கிலிருந்து திடீர் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

சோர்வு: காலையில் தொடர்ந்து சோர்வாக இருப்பது போன்ற உணர்வு, உங்கள் ஆற்றல் அளவை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

அமைதியின்மை: காலையில் ஓய்வெடுப்பதில் சிரமம் அல்லது எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வு இருப்பது காலை உயர் ரத்த அழுத்தத்துடன் இணைக்கப்படலாம்.

காலை மயக்கம்                                                              

எழுந்தவுடன் தலைச்சுற்றல் சில நேரங்களில் ரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படலாம்.

இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை காக்க, நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். உங்கள் காலைப் பொழுதைக் கவனித்து, உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும்!

வழக்கமான பரிசோதனைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது உகந்த ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும் இருதயச் சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read in English: 5 silent warning signs of high blood pressure in the mornings

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment