இந்த வெயில் காலத்தை நாம் கையாள்வது மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக இந்த வெயிலின் தாக்கத்தில் ஏற்படும் விளைவுகளை நாம் சமாளிக்க வேண்டும். இந்நிலையில் நாம் காலையில் எடுத்துகொள்ளும் உணவுகள் இந்த வெயிலின் தாக்கத்தை தணிக்க உதவும்.
ஸ்மூத்தி பவுல்
தற்போது கிடைக்கும் மாம்பழம், வாழைப்பழம், யோகர்ட் அல்லது இளநீர் உள்ளிட்டவற்றை உள்ளடங்கிய ஸ்மூத்தியை நாம் செய்ய வேண்டும். இதில் நாம் நட்ஸ் மற்றும் விதைகளை மேலாக தூவி எடுத்துகொள்ளலாம். இதை நாம் எடுத்துகொண்டால், 5 மணி நேரம் வரை பசிக்காது. உடல் சோர்வு ஏற்படாது. ஈரப்பதம் இழக்காமல் இருக்கலாம்.
சீயா விதைகளை புட்டிங்
தேங்காய் அல்லது பாதாம் பாலில் சீயா விதைகளை சேர்க்கவும், இதை பிரிட்ஜில் வைக்க வேண்டும். இரவு முழுவதும் பிரிட்ஜில் இருக்க வேண்டும். மேலும் அடுத்த நாள் காலையில், இதற்கு மேலாக பழங்கள், நட்ஸ், தேன் சேர்த்து சாப்பிடலாம். இது வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றும்.
இட்லி தேங்காய் சட்னி
ஆவியில் வேக வைத்த இட்லியை நாம் சாப்பிடலாம். இது உடலுக்கு நன்மை கொடுக்கும். இது எளிதாக ஜீரணமாகும். மேலும் இதில் உளுந்தில் இருந்து கிடைக்கும் புரத சத்து உள்ளதால், இது உடலுக்கு நல்லது.
தர்பூசணி சாட்
தர்பூசணியை நறுக்க வேண்டும். இதில், சாட் மசாலா, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளர வேண்டும். இதை நாம் எடுத்துகொண்டால், உடலுக்கு தேவையான நீர் சத்தை இது கொடுக்கிறது.
கொண்டைக்கடலை சுண்டல்
அவித்த கொண்டைக்கடலையில், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி சேர்க்கவும். தொடர்ந்து இதில் எலிமிச்சை சாறு, தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளரவும். இந்நிலையில் இது வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.