27 வயதாகும் பெண் ஒருவர், முதன்முறையாக சிரித்த தருணமும், அதற்கு பின்னால் மறைந்திருந்த சோகமான கதையும் கேட்பவர்களுக்கு கண்ணீரை வரவைத்துள்ளது.
ஆப்பிரிக்காவின் கேமரூன் பகுதியைச் சேர்ந்தவர் யாயா. 27 வயதாகும் இவர், ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆவர். அதிகம் படிக்காத, வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த யாயாவுக்கு சிறு வயதிலியே திருமணம் செய்து வைத்துள்ளனர் அவர்களின் குடும்பத்தினர்.
திருமணத்திற்கு பிறகு யாயாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது தான் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் இந்த யாயாவிற்கு அன்று இரவு தான் முதன் முதலில் முகத்தின் தாடை பகுதியில் அந்த சிறிய வடிவிலான பரு ஒன்று வந்துள்ளது.
பெண்களுக்கு வரும் முகப்பரு என்று யாயா அதை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. போக போக அது பெருசாகிகட்டியாக மாறியதுய். மருத்துவரிடம் சென்று போது மருத்துவர்கள் யாயாவிற்கு வந்திருப்பது டூயுமர் கட்டி என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை லட்ச கணக்கில் செலவாகும் என்றும், அதை நீக்காத வரை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வளர்ந்து பெருசாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த யாயா வீட்டை விட்டு வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தார். கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்த அந்த கட்டி யாயாவின் வாயையே ஒரு நாள் மறைத்து விட்டது. இதனால், அவரால் சாப்பிடவோ, பேசவோ, சிரிக்கவோ முடியாமல் போனது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/h7-16-300x200.jpg)
ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்த யாயாவிற்கு பணம் கொடுத்து உதவ யாரும் முன்வரவில்லையாம். இந்த கட்டியுடன் தனது முகத்தை பார்க்க வெறுத்த அவர், தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளார். இறுதியில் தன்னையே நம்பி இருக்கும் பெண் குழந்தையை நினைத்து முகத்தை துணியால் கட்டிக் கொண்டே வாழ ஆரம்பித்துள்ளார். அப்போது தான் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு உதவ முன்வந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/1-20-300x200.jpg)
ஆப்பிரிக்கவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் யாயாவிற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 2 நாட்கள் கழித்து மயக்கம் தெரிந்த யாயா, கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து ஆனந்தத்தில் அழுதாராம். அப்போது தான் 8 வருடங்களுக்கு பிறகு முதன் முறை வாய்விட்டு சிரித்து அது எப்படி இருக்கிறது என்றும் கண்ணாடியில் பார்த்து கண்கலங்கினார்.