அன்பால் கட்டியணைத்த அன்னை.. அமைதியின் முழு உருவாய் நின்ற புனிதர் தெரஸா!

 இந்தியாவின் மேற்குவங்கத்திற்கு  வருகை தந்த போது தான் தன் பெயரை ’தெரஸா’ என்று மாற்றிக் கொண்டார். 

ஒட்டு மொத்த மக்களையும் தனது அன்பால் கட்டியணைத்த அன்னை தெராஸாவின் 21 ஆவது  நினைவு நாள் இன்று . ஓட்டு மொத்த உலகமும் அன்னை தெராஸிவின் சேவையைக் கண்டு ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றது. அன்பு என்ற மூன்றெழுத்தை தனது உயிர் எழுத்தாக சுவாசித்தவர், அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்று அமைதியாகவே இருந்தார்.

அவரின் சேவைகள் எண்ணிலடங்காதவை. தனது 12 வயதில் சமூக சேவையில் ஈடுப்பட்ட, இறக்கும் தருவாயில் கூட பிறருக்கு அன்பு காட்ட வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிய வைத்து விட்டு சென்றார்.

 

வாழ்க்கை வரலாறு:

ஐரோப்பாவின் அல்பேனியாவில் 1910ஆம் ஆண்டு பிறந்த ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா என்ற பெண் தான்,  காலப்போக்கில் நம் அனைவருக்கும் அன்னையாகி அன்னை தெரஸா என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

கிறிஸ்துவ மறைப் பணியாளர்களாலும், அவர்களின் சேவையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். தனது 12வது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1929 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் மேற்குவங்கத்திற்கு  வருகை தந்த போது தான் தன் பெயரை ’தெரஸா’ என்று மாற்றிக் கொண்டார்.

1950 ஆம் ஆண்டு ’பிறர் அன்பின் பணியாளர்’ என்ற சபையைத் தொடங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உதவ தொடங்கினார். தெரசாவின் இந்த சேவைக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தனர்.

காந்தி பிரேம் நிவாஸ்’ என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது உள்ளிட்டவற்றை பெற்றார். 1979 ஆம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசைப்பெற்று  அமைதியின் முழு உருவமாய் நின்றார்.

1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி  உடல் நலக் குறைவு காரணமாக காலமானர். இன்றையை தலைமுறைக்கு  அன்பை எடுத்துச் சொல்ல  அவர் விட்டு சென்ற, காலத்தால் அழிக்க முடியாத  பொன் மொழிகள் இதோ…

1. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம்.

2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது.

3. அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை.அன்பை சொற்களால் விளக்க முடியாது. செயல்களினால் விளக்கம் பெறுகிறது அன்பு.

4. கருவுற்றால் ஒரு பிள்ளைக்கு மற்றுமே தாயாக இருக்க முடியும். கருணையுற்றால் ஆயிரம் பிள்ளைகளுக்கு கூட தாயாகலாம்.

5. இரக்கத்தான் பிறந்தோம்.. அதுவரை இரக்கத்துடன் இருப்போம்!

6. வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.

 

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close