/tamil-ie/media/media_files/uploads/2023/05/mothers-day_200_pexels.jpg)
அன்னையர் தினம் பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
Mother's Day 2023 Date in India: தாய்மை மற்றும் தாய்மார்களின் அன்பைக் கொண்டாடும் அன்னையர் தினம் இந்தியாவிலும் உலகெங்கிலும் அனுசரிக்கப்படும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
பொதுவாக அன்னையர் தினத்தை அன்னையர் ஞாயிறு எனவும் அழைபை்பார்கள். ஏனெனில் ஆரம்பகால கிறிஸ்தவ மரபின்படி, ஒரு குடும்பத்தின் தாய் மற்றும் அவர்களின் தாய்வழி பிணைப்பை கொண்டாடும் ஓர் விழா ஆகும்.
இது பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 14ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.
இதற்கிடையில், தாய் தெய்வங்களான ரியா மற்றும் சைபலின் நினைவாக திருவிழாக்களை நடத்திய பண்டைய கிரேக்கர்களும் ரோமானியர்களும், சமூகத்திற்கு தாய்மார்களின் அசைக்க முடியாத பங்களிப்பிற்காக அவர்களை அங்கீகரித்து பாராட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், நவீன கொண்டாட்டம் அமெரிக்காவில் 1907 இல் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.அன்னை ஜார்விஸ் தனது மறைந்த தாயார் ஆன் ஜார்விஸின் நினைவாக முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார்.
சமூக நல வழக்கறிஞராக தனது தாயின் அயராத உழைப்பால் ஈர்க்கப்பட்ட அன்னா,1,900 களின் முற்பகுதியில் தாய்மார்களுக்கான தேசிய அங்கீகார தினத்திற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில், 1914 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 28 வது ஜனாதிபதி உட்ரோ வில்சன், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் குறிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய தினம் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்தியா உட்பட உலகின் பிற பகுதிகளிலும் இந்தக் கொண்டாட்டங்கள் விரிவடைந்தன. இதில் எந்த விதியும் இல்லை என்றாலும், அன்னையர் தினம் என்பது பாசத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.