கடந்த வாரம் ஹரியானாவின் ரேவாரியில் தனது ஓட்டுனர் ஓவர்லோடிங் செய்ததால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ,ரூ .1.16 லட்சத்திற்கான சல்லானை அபராதமாக பெற்றிருக்கிறார் என்பதை தெரிந்து மிகவும் அதிர்ச்க்குள்ளனார் டெல்லியைச் சேர்ந்த யாமின் கான்.பிறகு, தனது டிரைவரிடம் அப்பணத்தை எடுத்து ஆர்டிஓ அலுவலகத்தில் டெபாசிட் செய்யுமாறு கேட்டிருந்திருக்கிறார்.. தனது ஓட்டுநர் ஜக்கர் ஹுசைன் அதிகாரிகளிடம் அபராதத் தொகையை சமர்ப்பிக்காமல், பணத்தை எடுத்த்க்கொண்டு தப்பிவிட்டார் என்ற மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது கானுக்கு.
நம்பிக்கையை மீறியதற்காக ஹுசைனுக்கு எதிராக கிரிமினல் வழக்கை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், உ.பி.யின் ஃபிரோசாபாத்தில் உள்ள கிராமத்தில் 57 வயதான ஜக்கர் ஹுசைனை கைதும் செய்தனர். கான் ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் ஓட்டுனர் ஹுசைனை வேலைக்கு அமர்த்தியதாகவும், ஒரு சல்லன் செலுத்த அவர் பணம் கொடுத்தது இதுவே முதல் முறை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனம் சட்டம் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், ஓவர்லோடிங் அபராதம் ரூ .2,000 லிருந்து ரூ .20,000 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், கூடுதல் எடைக்கான கட்டணங்கள் டன்னுக்கு ரூ .1,000 முதல் டன்னுக்கு ரூ .2,000 ஆக உயர்த்தப்பட்டன.
ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், இவ்வளவு பெரிய அபராதத்தை ஏற்படுத்தியதற்காக கான் ஹுசைனை கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் கானுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பியிருக்கிறார் ஹுசைன். கான் பணத்தை கொடுத்தபோது இதை பழிவாங்கும் ஒரு வாய்ப்புக்காக எடுத்து தலைமரைவாகிவிட்டார் ஹுசைன்.
கான் இதுகுறித்து கூறுகையில் “செப்டம்பர் 1 ம் தேதி, லாரி டெல்லியில் இருந்து ஹரியானாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அது அதிக சுமைக்காக அபராதம் விதிக்கப்பட்டிரிந்தது. அந்த நேரத்தில் ஓட்டுநரிடம் போதுமான பணம் இல்லை என்பதால், என்னிடம் செல்லானை வந்து கொடுத்தார். அபராதம் செலுத்த எனக்கு ஒரு வாரம் இருந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஹுசைனிடம் பணத்தைக் கொடுத்து சரியான நேரத்தில் அபராதத்தை செலுத்துமாறு சொல்லியிருந்தேன். பிறகு, வெள்ளிகிழமையில் இருந்து எனது தொலைபேசி அழைப்புகளை ஜக்கர் ஹுசைன் தவிர்த்தார். ரேவரியில் உள்ள ஆர்டிஓவை நான் தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது, அவர் ஒருபோதும் ரேவாரியை அடையவில்லை அபராத தொகையும் செலுத்தவில்லை, ”என்றார் கான்.