Advertisment

குழந்தைகள் கலரிங் புக், நொறுக்குத் தீனி, ஹார்லிக்ஸ் - மௌன ராகம் ரவீனா தாஹா ஷேரிங்ஸ்!

Mouna Ragam Raveena Daha about her routine Tamil News எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். அது ஹெர்பல் எண்ணெய்யாக இருந்தால் இன்னும் சிறந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mouna Ragam Raveena Daha about her routine Tamil News

Mouna Ragam Raveena Daha about her routine Tamil News

Mouna Ragam Raveena Daha about her routine Tamil News : 3 வயதாக இருந்தபோது தங்கம் சீரியல் வாயிலாகத் திரையில் தோன்றியவர் ரவீனா தாஹா. ராட்சசன், மௌன ராகம் எனத் திரைப்படங்கள், சின்னத்திரை சீரியல்கள் என பிசியாக இருப்பவர், சமீபத்தில் தன்னை எப்படி மன உளைச்சலிலிருந்து தற்காத்துக் கொள்கிறார் என்பதைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

Advertisment
publive-image

"எல்லோரும் ஏன் இவ்வளவு மேக்-அப் போட்டுட்டு நடிக்கணும். மேக்-அப் இல்லாமல் நடிக மாட்டார்களா என்றெல்லாம் கேட்பார்கள். அவ்வளவு வெளிச்சத்தில் நடிக்கிறோம். அதனால் எனக்குள் சருமம் மிகவும் டேமேஜ் ஆகும்.அதிலிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மேக்-அப் அவசியம். ஆனால், இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நிச்சயம் மேக்-அப்பை அகற்றுவது அவசியம்.

publive-image

நான் சருமத்திற்கான பெரிதாக எதுவும் பண்ணமாட்டேன். எப்போதாவது தோன்றினால் சீரம் மட்டும் போடுவேன். சின்ன வயது என்பதால், சரும பராமரிப்பு மற்றும் அழகுப் பொருள்களை உபயோகிக்க என் அம்மா விடமாட்டார். ஹேர்கட் மற்றும் கெரட்டின் செய்ய மட்டும்தான் நான் பியூட்டி பார்லர் போவேன். அப்படியே வீட்டில் பயன்படுத்தினாலும், பெரும்பாலும் ஹெர்பல் பொருள்களைத்தான் தேர்வு செய்வேன்.

publive-image

உணவுப் பொருள்களைப் பொறுத்த வரைக்கும், சாப்பாட்டைவிட நொறுக்கு தீனிகளைத்தான் நான் அதிகம் சாப்பிடுவேன். இதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்போதுவரை ஹார்லிக்ஸ் மட்டும்தான் குடிக்கிறேன். அதுவும் ஷூட்டிங்கில் எந்நேரமும் சாப்பிட்டுக்கொண்டேதான் இருப்பேன். இதனால்தான் எனக்கு அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது. என்றாலும், ஸ்கிப்பிங், ரன்னிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சியையும் அவ்வப்போது செய்துகொண்டிருப்பேன்.

publive-image

தலைமுடி அதிகமாக டேமேஜ் ஆகாமல் இருக்க, ஷாம்பூ உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளலாம். எந்தவித கெமிக்கல் பொருளும் இல்லாமல், தினமும் தலைக்குக் குளிக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஷாம்பூ பயன்படுத்திக் குளிக்கலாம். அதேபோல எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். அது ஹெர்பல் எண்ணெய்யாக இருந்தால் இன்னும் சிறந்தது.

publive-image

எனக்கு அதிகப்படியாக ஸ்ட்ரெஸ் ஏற்பட்டால், குழந்தைகள் வரைவதற்கான இருக்கும் டிராயிங் புக் எடுத்து வரைய ஆரம்பித்துவிடுவேன். அதனை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் எடுத்துச் செல்வேன். எல்லோரும் கிண்டல் செய்வார்கள். இருந்தாலும், அது என்னுடைய ஸ்ட்ரெஸ்ஸை முழுமையாகக் குறிக்கிறது".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Raveena Taha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment