/tamil-ie/media/media_files/uploads/2021/06/Rdup.jpg)
Mouna Ragam Raveena Dahan Personal Lifestyle Tamil News
Mouna Ragam Raveena Daha Personal Lifestyle Tamil News : 'அட இப்போ இருக்கிற குழந்தைகள் எல்லாம் எவ்வளவு வேகமா வளர்ந்துடுறாங்க' என்பது திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். அந்த வரிசையில் 'ராட்சசன்' திரைப்படத்தில் பள்ளி செல்லும் பதின்பருவ பெண்ணாகப் பார்த்த ரவீனா தாஹா, தற்போது திருமணம் செய்வது போன்ற காட்சிகளில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Rd1.png)
3 வயதில், சன் டிவியில் ஒளிபரப்பான ரம்யா கிருஷ்ணனின் தங்கம் தொடரில் சிறு வயது ரம்யாவாக திரைத்துறை பயணத்தைத் தொடங்கினார் ரவீனா. அதனைத் தொடர்ந்து நடிப்பு மீது ஈர்க்கப்பட்டு, எப்படியாவது நடிகையாகிவிடவேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்புகளை தேடித் சென்றிருக்கிறார். என்றாலும்,இவருடைய சீனர்களைப்போல இருந்ததால், பல இடங்களில் சிவப்பு கொடிதான்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Rd2.png)
தளபதி ரசிகையான ரவீனாவிற்கு ஜில்லா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஜீவா, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் .இப்போது விஜய் டிவியின் மௌன ராகம் தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து, பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றவர், பிறகு சக்தி கதாபாத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில், 'தங்களின் பேத்தி நடிக்கச் சென்றுவிட்டாள். அவ்வளவுதான். இனி படிப்புலாம் வராது' என்று புலம்பிக் கொண்டிருந்த ரவீனாவின் தாத்தா, பாட்டிக்கு, நன்கு படித்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளார். நடிப்பு, படிப்பு என எல்லாவற்றிலும் சுட்டியாக இருக்கும் ரவீனாவிற்கு மேக்-அப் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி, விதவிதமான போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் செய்வதும் இவருக்கு மிகவும் பிடிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.