ரோட்டு கடை புடவை, கூடையில் தேடல், ஏமாற்றம் – மௌன ராகம் ரவீனா லைஃப்ஸ்டைல்

Mouna Ragam Raveena Daha Shopping Lifestyle ஓர் புடவையை வாங்கி, அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் தாவணி எடுத்து, பிறகு அந்த புடவையில் பாவாடை மற்றும் பிளவுஸ் தைத்து உடுத்துவேன்.

Mouna Ragam Raveena Daha Shopping Lifestyle Tamil News
Mouna Ragam Raveena Daha Shopping Lifestyle Tamil News

Mouna Ragam Raveena Daha Shopping Lifestyle Tamil News : தன்னுடைய 3 வயதிலேயே திரைத்துறையில் தடம் பதித்த ரவீனா தாஹா, ராட்சசன் திரைப்படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டைலிஷான போட்டோஷூட் நடத்தியவர், லாக் டவுனில் பல இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்தார். தற்போது, விஜய் டிவியின் மௌன ராகம் தொடரின்மூலம் தினம்தினம் மக்களைக் கவர்ந்துவரும் ரவீனா, தன்னுடைய ஷாப்பிங் பேட்டர்ன் பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“பாவாடை தாவணி பிடிக்காதவர்கள் யாரு இருக்காங்க. எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும், இந்த மௌன ராகம் சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டின் போது தாவணி முதல் மேக் அப் வரை எல்லாம் பிடித்திருந்தது. ஆனால், அந்த பின்னல் ஜடை மட்டும் பிடிக்கவில்லை. என்றாலும், பிறகு பழகிவிட்டது.

எப்போதும் பெரிய பெரிய கடைகளைவிட, சின்ன சின்ன பிளாட்ஃபார்ம் கடைகளில் புடவைகளில் நிறைய டிசைன்ஸ் இருப்பது மட்டுமல்லாமல், விலை குறைவாகவும் இருக்கும். நான் எப்போதும் அதுபோன்ற கடைகளில்தான் வாங்குவேன். ஓர் புடவையை வாங்கி, அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் தாவணி எடுத்து, பிறகு அந்த புடவையில் பாவாடை மற்றும் பிளவுஸ் தைத்து உடுத்துவேன். இப்படிதான் என்னுடைய மௌன ராகம் காஸ்டியூம் ரெடியாகும்.

இதுவரை நான் அவ்வளவாகப் பேரம் பேசி எந்தப் பொருளையும் வாங்கியதில்லை. சும்மா குறைச்சு கொடுங்கண்ணா என்று கேட்டதுண்டு. அவ்வளவுதான். மற்றபடி அடிச்சு பேசுறதுலாம் வராது. அதேபோல ஷாப்பிங் போனால் 5 6 மணிநேரம் ஆகும். அவ்வளவு பர்ச்சேஸ் பண்ணுவீங்களா என்று கேட்காதீர்கள். ஒரு புடவைனாலும், நல்லதா எடுக்கணும் என்று பெஸ்ட் புடவை தேர்ந்தெடுக்க நேரம் ஆகும். அங்கு வைத்திருக்கும் கூடையில் எல்லாம் நான் தேடுவேன்.

ஒருமுறை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்த கவுனை கண்டு மனமுடைந்து போய்விட்டேன். வெள்ளை நிறத்தில் அழகாய் புஸ்ஸு புஸ்ஸுன்னு இருக்கே என வாங்கிய உடை, நேரில் அப்படியே ஆப்போசிட்டாக இருந்தது. யாரோ உபயோகித்து போட்டதுபோல் அழுக்காக இருந்தது. பிறகு அதனை கட் செய்து, பாதியை கரித்துணியாகவும், மீதியை மினி கவுனாகவும் மாற்றி உபயோகித்தேன். சின்ன பொண்ணுன்னு இப்படி ஏமாத்திட்டாங்களே”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mouna ragam raveena daha shopping lifestyle tamil news

Next Story
காலையில் 4, மாலையில் 4 சாப்பிடுங்க: பாதாம் தரும் பயன்கள் அதிகம்; ஆய்வு ரிசல்ட்Health benefits of Almonds in tamil: Eating almonds improve blood glucose
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com