பருக்கள் தெரிந்தால்தான் அழகு - 'மௌன ராகம்' ரவீனா பியூட்டி டிப்ஸ்!
Mouna Ragam Raveena Daha Beauty Tips Tamil பருக்கள் ஒருவித அழகுதான். அப்படியே விட்டுவிடலாம். முகத்தை பிரைட்டாக மாற்ற லிப்ஸ்டிக் மற்றும் மஸ்காராவே போதும்.
Mouna Ragam Raveena Daha Beauty Tips Tamil பருக்கள் ஒருவித அழகுதான். அப்படியே விட்டுவிடலாம். முகத்தை பிரைட்டாக மாற்ற லிப்ஸ்டிக் மற்றும் மஸ்காராவே போதும்.
Mouna Ragam Raveena Daha Beauty Tips Tamil : 'ராட்சசன்' திரைப்படத்தில் அறிமுகமாகி, கடந்த ஆண்டு லாக்டவுனில் விதவிதமான போட்டோஷூட் செய்து, பல ரசிகர்களை தன் வசமாக்கியவர் ரவீனா தாஹா. தற்போது விஜய் டிவியில் ஹிட் நடித்துக்கொண்டிருக்கும் 'மௌன ராகம்' தொடரில் வளர்ந்த 'சக்தி' கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் இவர் சில உபயோக அழகுக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
Raveena Daha
"காலை எழுந்ததும் வேப்பிலை, புதினா உள்ளிட்ட ஹெர்பல் பவுடர்களை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினாலே போதும். வேறு எந்த விதமான க்ரீம்களும் தேவையே இல்லை. அதேபோல கடலை மாவு மற்றும் தயிர் இரண்டையும் கலந்து முகத்தில் அப்லை செய்து கழுவினால் பளபளப்பான சருமம் நூறு சதவிகிதம் கியாரண்டி.
Mouna Ragam Raveena Daha Photos
Advertisment
Advertisements
நான் இரவு நேரங்களில் சருமத்திற்காக நேரம் செலவழிப்பேன். வெளியேய் சென்றுவிட்டு வந்ததும், தேங்காய் எண்ணெய் வைத்து மேக்-அப் போன்றவற்றை சுத்தம் செய்து, ஃபேஸ் வாஷ் உபயோகித்து நன்கு முகத்தைக் கழுவுவேன். பிறகு, பழங்கள்கொண்ட ஃபேஸ் பேக் போடுவேன். அதன் பிறகு நைட் சீரம் போட்டுகொண்டு தூங்க செல்வேன். அவ்வளவுதான் என்னுடைய நைட் ரோட்டின்.
Raveena Daha Latest Photos
மேக்-அப்பில் முகப்பருக்களை மறைப்பதற்காக ஏராளமான ஃபவுண்டேஷன் உபயோகிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. முடிந்த அளவிற்கு இயற்கையாகவே இருக்க முயற்சி செய்யலாம். பருக்கள் ஒருவித அழகுதான். அப்படியே விட்டுவிடலாம். முகத்தை பிரைட்டாக மாற்ற லிப்ஸ்டிக் மற்றும் மஸ்காராவே போதும். சும்மா ட்ரை செய்து பாருங்கள். அந்த மாற்றம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
Raveena Daha Skincare Tips
இதுதவிர, காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வேன். டயட்டெல்லாம் பெரிதாகப் பின்பற்ற மாட்டேன். பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடுவேன். சாப்பிடுவதற்கேற்ற உடற்பயிற்சி இருந்தாலே போதும்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil