சின்னத்திரை குழந்தை நட்சத்திரத்தில் இவர் வேற லெவல்.. மெளன ராகம் சக்தி லைஃப்ஸ்டைல்!

மௌன ராகம் வேலன் என்பதை தழுவி 'வேலம்மாள்' என்று பெயரிடப்பட்டுள்ளது

By: Updated: February 13, 2021, 01:30:38 PM

mouna ragam sakthi family vijay tv mouna ragam : விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். இந்த சீரியல் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. மேலும் இந்த சீரியலின் அடுத்த பாகம் கடந்த வாரத்தில் இருந்து இளிப்பரப்பாகி வருகிறது .

இந்நிலையில் ராட்சசன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த ரவீனா மெளன ராகம் சீரியல் 2 ஆம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மௌன ராகம் சீரியலை தாங்கிப் பிடித்தது சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகா தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான கிருத்திகாவை வைத்து ஒரு மெகா சீரியலை விஜய் டிவி உருவாக்கியுள்ளது. பழங்காலத்தில் நடப்பது போன்ற பிரமாண்ட கதையில் ஒரு பெண் நாட்டை ஆண்ட கதையாக இது உருவாக்கியுள்ளது.

அதுவும் பெண் குழந்தைகளை வெறுக்கும் ராஜாவின் மனதை இளவரசி எப்படி கவர போகிறாள் என்பது தான் கதையின் கரு போல. மௌன ராகம் சீரியலிலும் கிட்டத்தட்ட இதே ஒன் லைன் என்பதால் கிருத்திகா வெளுத்து வாங்குவார் எனபதால் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த சீரியலுக்கு மௌன ராகம் வேலன் என்பதை தழுவி ‘வேலம்மாள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளாமே உள்ளது. அதுமட்டுமில்லை, இவரின் நடிப்பு திரையில் மின்னும். பள்ளி ப்ளஸ் சீரியல் என்று இப்பவே ரொமப் பிஸி. அதுமட்டுமில்லை, கிருத்திகா சங்கீதம் கற்றுக் கொண்டு வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Mouna ragam sakthi family vijay tv mouna ragam serial sakthi age mouna ragam serial hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X