மவுத் வாஷ் ரெகுலரா யூஸ் பண்ணா… இந்த ஆபத்து இருக்கு; எச்சரிக்கும் டாக்டர் விஜி
நீங்கள் மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தும்போது, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும். இதனால், உங்களுக்கு வாயில் அடிக்கடி புண்கள் (Ulceration) உருவாகும் வாய்ப்புகள் அதிகம், என்கிறார் டாக்டர் விஜி.
நீங்கள் மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தும்போது, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும். இதனால், உங்களுக்கு வாயில் அடிக்கடி புண்கள் (Ulceration) உருவாகும் வாய்ப்புகள் அதிகம், என்கிறார் டாக்டர் விஜி.
மவுத்வாஷ் பயன்படுத்தும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா? அப்படியென்றால், தயவுசெய்து அந்தப் பழக்கத்தை உடனே விட்டுவிடுங்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?
Advertisment
நம் வாயில் இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (Good Bacteria) அதிகமாக இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தும்போது, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும். இதனால், உங்களுக்கு வாயில் அடிக்கடி புண்கள் (Ulceration) உருவாகும் வாய்ப்புகள் அதிகம், என்கிறார் டாக்டர் விஜி.
வாய் துர்நாற்றத்திற்கு தீர்வுகள்:
உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது:
Advertisment
Advertisements
ஆயில் புல்லிங்: தினமும் நல்லெண்ணெய் கொண்டு எண்ணெய் கொப்பளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் எண்ணெய் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, நாக்கை சரியாக சுத்தம் செய்யாமல் விடுவதுதான். எனவே, தினமும் இரண்டு முறை பல் துலக்கும்போது நாக்கையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
இந்த எளிய பழக்கவழக்கங்களை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்தாலே, வாய் துர்நாற்றம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.