பாருங்க முழுசா ஃபேஷன் உலகில் மூழ்கி போய் இருக்கும் சாக்‌ஷி தோனியை பாருங்க!

இதுக் குறித்து அதிகம் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ms dhoni wife sakshi dhoni
ms dhoni wife sakshi dhoni

ms dhoni wife sakshi dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு எவ்வளவு ரசிகர்களோ அதே அளவிற்கு அவரின் குடும்பத்தின் மீது ரசிகர்கள் அளவுக்கு அதிகமான மரியாதை வைத்துள்ளனர்.தோனியின் செல்ல மகள் ஜிவாவை கொஞ்சுவது, மனைவி சாக்‌ஷியை அண்ணியார் என அழைத்து அவர்களுக்கு தனியாக ஃபேன்ஸ் க்ளப் வைக்கும் அளவிற்கு எக்ஸ்டீரிம் லெவல் தோனி வெறியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்திய அணியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருபவர் தோனி. இந்தியாவிற்காக மூன்றுவகையான ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்று தந்த முதல் கேப்டன் இவரே. தோனி கடந்த 2010ஆம் ஆண்டு சாக்‌ஷியை கரம் பிடித்தார்.

மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று பிரபலங்களை திருமணம் செய்யாமல் சாக்‌ஷியை தோனி காதலித்து குறித்து அதிகளவில் பேசப்பட்டது. சாக்‌ஷி ஹோட்டல் மேனேஜ்மன்ட் படித்துவிட்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வந்தார். அந்த ஹோட்டலில் தான் தோனி அவரை முதன் முதலில் பார்த்து பிடித்துப்போக இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

தோனியின் கிரிக்கெட் உலகை மட்டுமில்லை,அவரின் பள்ளிக்காலம், முதல் காதல், திருமணம் என அவரின் வாழ்க்கை முறை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். சாக்‌ஷி தோனிக்கு மாடலிங்கில் மிகப் பெரிய ஆர்வம். நிறைய ஃபேஷன் ஷோக்களையும் அவர் நடத்தியுள்ளார்.

இதுக் குறித்து அதிகம் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் சமீபத்தில் சாக்‌ஷியின் ஃபேஷன் ஆர்வத்தை வெளிப்படுத்தும் கிளாமர் மற்றும் வித்யாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் சாக்‌ஷியா இது என்று வாயடைத்து போயுள்ளனர். இணையத்தில் இந்த புகைப்படங்களும் படு வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ms dhoni wife sakshi dhoni sakshi dhoni instagram sakshi dhoni images sakshi dhoni photos sakshi dhoni fashion

Next Story
மருத்துவர்களின் வேலைநிறுத்தம் : பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன?doctors Strike in Chennai today,tamilnadu doctors strike , Modern Medicine and Politics : மருத்துவர்களின் வேலைநிறுத்தம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com