நீரிழிவு நோயின் அதிகம் பேசப்படாத அறிகுறிகள் இதுதான்!

உணவு மருத்துவ ஆலோசகரும் நீரிழிவு கல்வியாளருமான கனிக்கா மல்ஹோத்ராவின் கருத்துப்படி, பிறப்புறுப்பு அரிப்பு நீரிழிவு நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம், குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய் ஆகும்.

உணவு மருத்துவ ஆலோசகரும் நீரிழிவு கல்வியாளருமான கனிக்கா மல்ஹோத்ராவின் கருத்துப்படி, பிறப்புறுப்பு அரிப்பு நீரிழிவு நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம், குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய் ஆகும்.

author-image
WebDesk
New Update
diabetes

பிறப்புறுப்பு அரிப்பு நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம், இது பெரும்பாலும் உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகளுடன் தொடர்புடையது. இது ஏன் நிகழ்கிறது, எப்போது உதவியை நாட வேண்டும், அதை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள். (கோப்பு படம்)

நீரிழிவு நோய் அறிகுறிகளைப் பற்றி மக்கள் யோசிக்கும்போது, ​​அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு ஆகியவை பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், குறைவாக விவாதிக்கப்படும் ஆனால் முக்கியமான அறிகுறி பிறப்புறுப்பு அரிப்பு ஆகும், இது பெரும்பாலும் ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்படுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

உணவியல் நிபுணர் மற்றும் நீரிழிவு கல்வியாளர் ஆலோசகர் கனிகா மல்ஹோத்ராவின் கருத்துப்படி, பிறப்புறுப்பு அரிப்பு நீரிழிவு நோயின், குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இரத்த சர்க்கரை அளவிற்கும் ஈஸ்ட் தொற்றுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது தனிநபர்கள் சரியான நேரத்தில் நோயை அறிந்து சிகிச்சையைப் பெற உதவும் என்கிறார்.

நீரிழிவு நோய் ஏன் பிறப்புறுப்பு அரிப்புக்கு காரணமாகிறது?

Advertisment
Advertisements

நீரிழிவு நோய்க்கும் பிறப்புறுப்பு அரிப்புக்கும் இடையிலான தொடர்பு உயர் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ளது, இது ஈஸ்ட் (கேண்டிடா) செழிக்க ஒரு சிறந்த சூழலை உருவாக்குகிறது.

“ஈஸ்ட் சர்க்கரையை அதிகமாக உட்கொள்கிறது; இதனால், இரத்தம், சிறுநீர் மற்றும் சுரப்புகளில் குளுக்கோஸ் அதிகரிப்பது பிறப்புறுப்பு பகுதியில் அதன் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது” என்று மல்ஹோத்ரா விளக்குகிறார்.

இது எப்படி நிகழ்கிறது என்பதை இங்கே அறிந்துகொள்வோம்:

உயர் ரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு ரத்த ஓட்டத்தில் அதிகப்படியான சர்க்கரையை ஏற்படுத்துகிறது, இது வியர்வை, சிறுநீர் மற்றும் யோனி திரவங்கள் போன்ற உடல் சுரப்புகளிலும் பரவுகிறது.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு: அதிக குளுக்கோஸ் அளவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகின்றன. இதனால், உடல் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது.

ஈரப்பதமான சூழல்: சூடான மற்றும் ஈரப்பதமான பிறப்புறுப்பு பகுதி ஏற்கனவே ஈஸ்ட் வளர்ச்சிக்கு ஆளாகிறது. மேலும், அதிகப்படியான குளுக்கோஸ் அதன் அதிகப்படியான வளர்ச்சியை மேலும் தூண்டுகிறது. இது அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது.

vaginal

ஈஸ்ட் சர்க்கரையில் செழித்து வளர்கிறது; இதனால், ரத்தம், சிறுநீர் மற்றும் சுரப்புகளில் குளுக்கோஸ் அதிகரிப்பது பிறப்புறுப்பு பகுதியில் அதன் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது (Source: Getty Images/Thinkstock)

நீங்கள் எப்போது கவலைப்பட வேண்டும்?

அவ்வப்போது பிறப்புறுப்பு அரிப்பு ஏற்படுவது பொதுவானது மற்றும் சுகாதாரப் பொருட்கள், ஒவ்வாமை அல்லது உராய்வு காரணமாக ஏற்படலாம். இருப்பினும், தொடர்ச்சியான அரிப்பு மற்றும் பிற அறிகுறிகள் நீரிழிவு போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்னையைக் குறிக்கலாம் என்று மல்ஹோத்ரா கூறினார்.

அறிகுறிகள் இவைதான்:

தொடர்ச்சியான பிறப்புறுப்பு அரிப்பு அல்லது எரிச்சல் இருக்கும்
(பெண்களுக்கு)

பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றி அடர்த்தியான, வெள்ளை நிற வெளியேற்றம்.

பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி சிவத்தல் மற்றும் எரிச்சல்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு

சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தொடர்ச்சியான ஈஸ்ட் தொற்றுகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் அல்லது விவரிக்க முடியாத எடை இழப்பு போன்ற நீரிழிவு நோயின் அறிகுறிகள்.

நீங்கள் இந்த அறிகுறிகள் எல்லாவற்றையும் அனுபவித்தால், நீரிழிவு பரிசோதனை செய்வது மிக முக்கியம்.

நீரிழிவு தொடர்பான ஈஸ்ட் தொற்றுகளை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் தடுப்பது

மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஈஸ்ட் தொற்றுகளைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முக்கியமான வழி ரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகும்.

*ரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க வேண்டும்: நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவைப் பின்பற்றவும், தவறாமல் உடற்பயிற்சி செய்யவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

*பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சைகளைப் பயன்படுத்துங்கள்: மருந்துச் சீட்டு அல்லது பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள், வாய்வழி மருந்துகள் அல்லது சப்போசிட்டரிகள் தொற்றுநோயை ஒழிக்க உதவும்.

*நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்: பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள், காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள், கடுமையான சோப்புகள் அல்லது வாசனை திரவியப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

*இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள்: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவு ஈஸ்ட் வளர்ச்சியைக் குறைக்க உதவும்.

நீரேற்றத்துடன் இருங்கள்: நிறைய தண்ணீர் குடிப்பது அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்ற உதவுகிறது.

சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சை திட்டத்திற்கு மருத்துவரை அணுகுவது அவசியம். ஈஸ்ட் தொற்றுகள் அடிக்கடி ஏற்பட்டால், நீரிழிவு நோய்க்கான மருத்துவ மதிப்பீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: