அரண்மனை செட்டப்பில் 3 நாட்கள் நடந்த அம்பானி மகள் நிச்சயதார்த்தம்! செலவு மட்டும் இத்தனை கோடி!

  50 வகையான உணவுகள் பரிமாறப்படும் பல வகையான பூக்களால் மழை பெய்யும்

உலக  பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்  முகேஷ் அம்பானியின் மகள்  நிச்சயதார்த்தம் இத்தாலியில் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய்  நடந்து முடிந்தது.

 அம்பானி மகள் நிச்சயதார்த்தம் :

நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வரும் அம்பானி வீட்டில் தொடர்ந்து  திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும்  கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆகாஷும், ஸ்லோகாவும்  பள்ளி  காலத்தில் இருந்தே நண்பர்கள்.   நாளடைவில் நட்பு காதலாக  மாற்றி இரு வீட்டாரின் சம்மத்துடன் நிச்சயார்த்தம் நடந்து முடிந்தது.  வரும் டிசம்பர் மாதம் திருமணம், நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில்,  அம்பானியின் மகளான  இஷா அம்பானிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார். ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார்.

இந்நிலையில் இருவரின் காதல் விவகாரமும் வீட்டிற்கு தெரிந்து   அவர்கள், பச்சை கொடி காட்டியுள்ளனர். இதனையடுத்து,
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  ஈஷா அம்பானிக்கும் ஆனந்த்திற்கு இத்தாலியில் உள்ள லேக் கோமோ என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தொடர்ந்து 3 நாட்கள்  நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இந்த நிச்சயதார்த்திற்கு மட்டும்  கோடி கணக்கில் செலவானதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிச்சயதார்த்ததிற்கு ஹாலிவுட்டில் இருந்து  அனைத்து கலைஞர்களும் கலந்துக் கொண்டனர். கதைகளில் கேட்டிருப்போம் ராஜா, ராணிக்கு   சொர்க்கத்தில்  திருமணம் நடக்கும்.  50 வகையான உணவுகள் பரிமாறப்படும் பல வகையான பூக்களால் மழை பெய்யும் என்று. இவை அனைத்தும் அம்பானியின் வீட்டி திருமண  விழாவில் அரங்கேறியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close