/tamil-ie/media/media_files/uploads/2019/11/Muktha-Babu-Family-photos.jpg)
Muktha Babu Family photos
Thamira Bharani Actress Banu : நடிகர் விஷால் நடித்த ‘தாமிர பரணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை முக்தா பானு.
முக்தா பானுகேரளாவில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே சினிமா துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். 14 வயதில் ‘அச்சனுரங்காத வீடு’ என்னும் மலையாள படத்தில் ஹீரோயினியாக நடித்தார். அதன் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளிவந்த தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனது பெயரான எல்சா ஜார்ஜ் என்பதை மறக்கும் அளவுக்கு, அந்தப் படத்தின் பானு கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தனது பெயரை முக்தா பானு என மாற்றிக் கொண்டார்.
முக்தா பானுபின்னர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல், சட்டபடி குற்றம், பொன்னர்-சங்கர் என ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் பானுவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை. அதன் பின்னர் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கிய பானு, அங்கு சில படங்களில் நடித்தார். அதோடு முன்னணி மலையாள சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்தார். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சந்திர குமாரி’ சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்திலும் நடித்தார்.
முக்தா பானுரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பானுவுக்கு, ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கொச்சியில் பியூட்டி பார்லர், குடும்பம், நடிப்பு என அனைத்தையும் பேலன்ஸ் செய்து வருகிறார் பானு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us