முள்ளு முருங்கையில் சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது. இந்த முள்ளு முருங்கையை கல்யாண முருங்கை என்று அழைப்பார்கள். இந்த முருங்கை குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி, இருமல் சரி யாகும். இதில் அடை தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முள்ளு முருங்கை- 2 கப்
அரிசி- தேவையான அளவு
வெங்காயம்- 1
உப்பு- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- சிறிதளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
சீரகம்- 1 டீஸ்பூன்
பெருங்காயம்- அரை டீஸ்பூன்
செய்முறை
முதலில் முள்ளு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கைபிடி முள்ளு முருங்கை இலை சரியாக இருக்கும். அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி நன்றாக ஊறிய பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். கூடவே முள்ளு முருங்கை இலையை அதில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். மாவை வலுவலுவென அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்த மாவில் அரை கப் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு பச்சை மிளகாயையும் சேர்த்து கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் சீரகத்தை கசக்கி சேர்க்கவும்.
அடுத்து அரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் அரைத்த மாவை அடை தோசை போல் மொத்தமாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சத்து நிறைந்த சுவையான முள்ளு முருங்கை அடை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“