இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிக்க நினைப்பவர்களுக்கு, முல்தானி மெட்டி ஒரு அற்புதமான தேர்வு. மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கேட் ஆகிய தாதுக்களால் ஆன முல்தானி மட்டியை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழுமையான பலன்களைப் பெற முடியும்.
தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆஞ்சல் முல்தானி மட்டியைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களை விளக்குகிறார்.
Advertisment
எண்ணெய் பசை சருமத்திற்கு: எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
வறண்ட சருமத்திற்கு: வறண்ட சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டியுடன் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, வறட்சியைப் போக்க உதவும்.
Advertisment
Advertisements
பருக்கள் உள்ள சருமத்திற்கு: பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு முல்தானி மட்டியுடன் ரோஸ் வாட்டர் மற்றும் தேன் கலந்து பயன்படுத்தலாம். தேனில் உள்ள ஆண்டிபாக்டீரியல் பண்புகள் பருக்களைக் கட்டுப்படுத்தவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவும்.
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
முல்தானி மட்டியைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அதன் முழுப் பலனைப் பெற உதவும்.
குளிர்ந்த நீரில் கழுவவும்: மாஸ்க்கை நீக்கும்போது, குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மெதுவாகக் கழுவ வேண்டும். இது சருமத் துளைகளை இறுக்க உதவும்.
மாய்ஸ்சரைசர் அவசியம்: மாஸ்க்கை கழுவிய பிறகு, கண்டிப்பாக ஒரு திக் லேயர் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து, வறண்டு போவதைத் தடுக்கும்.
தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
வறண்ட மற்றும் எரிச்சல் கொண்ட சருமத்தில் முல்தானி மட்டியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது சரும எரிச்சலை மேலும் அதிகரிக்கலாம்.
முல்தானி மட்டி மாஸ்க்கை முகத்தில் தடவிய பிறகு, முழுமையாக உலர விடக்கூடாது. மாஸ்க் சுமார் 70% காய்ந்ததும் கழுவிவிட வேண்டும். முழுமையாக உலர விடுவது சருமத்தை மேலும் வறண்டு போகச் செய்து, இறுக்கமாக்கலாம்.