Tamil Nadu News: பண்டிகை காலத்தில், சொந்த ஊரிற்கு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மக்கள் பலர் தவித்து வருகின்றனர்.
இந்திய முழுவதும் பெரிதாக கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி திகழ்கிறது. இப்பண்டிகைக்கு சொந்த ஊரிற்கு சென்று கொண்டாட நினைக்கும் பலர் போக்குவரத்து நெரிசலில், முன்பதிவு கிடைக்காமல் மாட்டிக்கொள்கின்றனர்.

இந்த ஆண்டு, அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதால் பலர் வெள்ளிக்கிழமை இரவே ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.
ஆனால், ரயில் சேவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிறைந்துவிட்டதனால், மக்கள் போக்குவரத்து சேவையை பற்றி தேடி தவிக்கின்றனர். இதே நிலைமையில் பேருந்து சேவைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையினால் சிறப்பு போக்குவரத்து சேவைகள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், பயணச்சீட்டு கட்டண விலை 3-4 மடங்கு அதிகரித்து வருகிறது.
ரயில் சேவைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றால், காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்து வரலாம். ஆனால், உங்கள் பதிவு உறுதியாவதற்கு உத்திரவாதம் இல்லை.
உங்கள் ரயில் பயணச்சீட்டை உறுதிசெய்ய இன்னோரு வழியாக தட்கல் முறை இருக்கிறது. பொதுவாக, ஒரு ரயில் பயணம் செய்வதற்கு முந்தைய நாள் காலை 10 மணியளவிலும், ஏசி பெட்டிகளுக்கு காலை 11 மணியளவில் தட்கல் புக்கிங் தொடங்கும்.
தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், ஏசி பெட்டிகளின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. ஆகையால், மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு பதிவு செய்து பயணம் செய்யலாம்.
மேலும், தட்கல் முறையில் பதிவு செய்யும் பொழுது, சிலீப்பர் கிளாசிற்கு 11 மணியளவில் முயற்சி செய்தால் பயணச்சீட்டு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முன்பதிவை ஆன்லைனில் செய்யும்பொழுது சில சிக்கலை எதிர்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனால், ரயில் நிலையத்திற்கு சென்று பயணச்சீட்டை எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைனை விட டிக்கெட் கவுண்டரில் பயணச்சீட்டு பெறுவது எவ்வளவு எளிமையான விஷயமோ, அதே போல நீங்கள் எந்த ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரை அணுகுகிறீர்கள் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
கூட்டம் குறைவாக உள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், பயணச்சீட்டை இன்னும் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.
ரயில் சேவைக்கு முன்பதிவு செய்யும்பொழுது, காத்திருப்பு பட்டியல் நீளமாக இருக்கிறது என்பதால் எப்படியும் கிடைக்காது என்ற எண்ணத்தில் பலர் அந்த முயற்சியை கைவிட்டுவிடுவார்கள். ஆனால் இப்படி ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்தவர்கள் தட்கலில் பயணச்சீட்டு கிடைத்தால், பட்டியலில் இருந்து அவர்களின் பதிவை நீக்கிவிடுவார்கள்.
இதனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள எண்ணிக்கை கடைசி நேரத்தில் குறையும் வாய்ப்புள்ளது. இந்த பண்டிகை காலத்தில், சொந்த ஊரிற்கு சென்று கொண்டாட திட்டமிட்டு டிக்கெட்டை பதிவு செய்வது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil