தீபாவளி முறுக்கு.. மாவு இப்படி பக்குவமாய் அரைச்சா அரிசி முறுக்கு அட்டகாசமாய் இருக்கும்!

வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

By: November 14, 2020, 7:02:40 AM

murukku recipe arisi murukku recipe: முறுக்கு பண்டைய நாட்களிலே வீடுகளில் பண்டிகைகளின் போது செய்து பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு பலகாரக் கடைகளிலும், தெருக்களிலும், பாக்கெட்டுகளிலும் விற்கப்படுகிறது. கடைகளில் ரெடிமேட் முறுக்குமாவு விற்கப்படுகிறது.

ஆனாலும் நம் வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

புழுங்கல் அரிசி – 2 கிலோ
கடலை மாவு – 500 கிராம்
பொட்டுக்கடலை – 500 கிராம் (அரைத்து வைக்க)
எள்ளு – தேவையான அளவு
ஓமம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊற வைத்து, அரைத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் (கைகளில் அழுத்தி தேய்த்தது) சேர்த்து கலக்க வேண்டும். வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால் போதுமானது.

கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு பிழியும் (முறுக்கு பிடியில்) சுற்றி எடுத்துக்கொண்டு பொறிக்கலாம். பக்குவாமாக சராசரி சூட்டில் (அடுப்பு நெருப்பில்) மொறுமொருப்பான, சுவையான அரிசி முறுக்கு தயார் செய்யலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Murukku recipe arisi murukku recipe murukku recipe in tamil murukku recipe video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X