Murukku recipe tamil, murukku recipe in tamil : தீபாவளி என்ற சொல்லை கேட்டவுடன் அனைவருக்கும் ஓர் உற்சாகம் பிறப்பது இயல்பு. இந்த உற்சாகத்திற்கு புத்தாடைகள், பலகாரங்கள், இனிப்புக்கள், மத்தாப்புக்களே காரணம். தீபாவளியை சிறப்பிக்கும் பலகாரமான அரிசி முறுக்கு எப்படி செய்வது ? பார்க்கலாம் வாங்க.
Advertisment
புழுங்கல் அரிசி - 2 கிலோ
கடலை மாவு - 500 கிராம்
பொட்டுக்கடலை - 500 கிராம் (அரைத்து வைக்க)
Advertisment
Advertisements
எள்ளு - தேவையான அளவு
ஓமம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊற வைத்து, அரைத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் (கைகளில் அழுத்தி தேய்த்தது) சேர்த்து கலக்க வேண்டும். வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால் போதுமானது.
கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு பிழியும் (முறுக்கு பிடியில்) சுற்றி எடுத்துக்கொண்டு பொறிக்கலாம். பக்குவாமாக சராசரி சூட்டில் (அடுப்பு நெருப்பில்) மொறுமொருப்பான, சுவையான அரிசி முறுக்கு தயார் செய்யலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”