Murungai kai recipe news, murungai kai kootu tamil video: முருங்கைக்காயை மார்க்கெட்டிங் செய்த பெருமை காலாகாலத்திற்கும் நடிகர் பாக்யராஜையே சேரும். எனினும் அந்த மார்க்கெட்டிங்கிற்கு தகுதியான ஒரு உணவுப் பொருள் முருங்கைக்காய்.
Advertisment
இதில் உள்ள இரும்புச் சத்து உடலை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இது போன்ற பேன்டமிக் காலங்களில் இன்னும் சற்று அதிகமாகவே முருங்கைக்காய் பயன்படுத்தலாம்.
முருங்கைக்காயை சாம்பாரில் பயன்படுத்துவதுண்டு, குழம்பு வைக்கும் நடைமுறையும் இருக்கிறது. அவற்றைவிட முருங்கைக்காய் கூட்டு, அதிகமாக முருங்கையின் பலன்களை பெற உங்களுக்கு உதவும். முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறையை இங்கு காணலாம்.
Murungai kai kootu tamil video: முருங்கைக்காய் கூட்டு
Advertisment
Advertisements
முருங்கைக்காய் கூட்டு செய்யத் தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக வெட்டிய முருங்கைக்காய் - 2 கப், கடலைப் பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - கால் டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்.
தாளிக்க தேவையானவை: எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன், கடுகு - கால் டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
முருங்கைக்காய் கூட்டு செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட வேண்டும். பின்னர் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து, அதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக வேகவைத்த பருப்புகளை சேர்த்து, தாளித்து இறக்க வேண்டும். சுவையான முருங்கைகாய் கூட்டு ரெடி.
சுடு சாதத்திற்கும், பழைய சாதத்திற்கும் அற்புத சைட் டிஷ் இது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"