முருங்கை கீரையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்புத் சத்து அதிகம் உள்ளது. ரத்த சோகை, ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் முருங்கை கீரை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். எனினும் குழந்தைகள் கீரையாக சாப்பிட விரும்பமாட்டாகள். அந்த வகையில் எளிதாக முருங்கை கீரை தோசை செய்து கொடுங்கள் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
முருங்கை இலை - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு பாத்திரம் எடுத்து பச்சரிசி, உளுத்தம்பருப்பை தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஊற வைத்த பின் இரண்டையும் எடுத்து ஒரே மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அடுத்த நாள் முருங்கை கீரை வாங்கி சுத்தம் செய்து எடுக்கவும். இப்போது முருங்கை கீரை இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். தற்போது இரவு புளிக்க வைத்த மாவுடன் இந்த அரைத்த முருங்கை கீரையை போட்டு கலக்கவும்.
இப்போது இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்தாக அடுப்பில்
தோசை கல் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். இப்போது முருங்கை கீரை கலந்த மாவில் தோசை ஊற்றவும். எப்போதும் பல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுசையான, மிகவும் ஆரோக்கியமான முருங்கை கீரை தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“