சுவை, ஆரோக்கியமான முருங்கைக் கீரை ஆம்லெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை- 1 கப்
முட்டை – 3
வெங்காயம் – 1
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் – அரை கப்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித் தழை – சிறிதளவு
சீரகம் – கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருளையும் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும்.
அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் தடவி,முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவை, ஆரோக்கியமான முருங்கைக் கீரை ஆம்லெட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“