Murungai keerai recipe in tamil, Murungai keerai sadam making tamil video: உங்கள் வீட்டு அருகிலேயே கிடைக்கும் ஒரு எளிய உணவுப் பொருள் முருங்கைக் கீரை. முருங்கை மரம் வைத்திருப்பவர்கள், இந்தக் கீரைக்கு பணம்கூட வாங்குவதில்லை. ஆனால் அவ்வளவு எளிதாகக் கிடைக்கும் இந்தக் கீரையில் அளவிட முடியாத பலன்கள் இருக்கின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமையன உணவு இது.
Advertisment
முருங்கைக் கீரை மூலமாக சாம்பார், ரசம், கூட்டு, சூப் என பலவகை உணவு வகைகளை செய்ய முடியும். அந்த வகையில் சுவையான முருங்கைக் கீரை சாதம் செய்வது எப்படி? என இங்கே பார்க்கலாம்.
Murungai keerai sadam making tamil video: முருங்கைக் கீரை சாதம்
Advertisment
Advertisements
முருங்கைக் கீரை சாதம் தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப், துவரம் பருப்பு - கால் கப், முருங்கை கீரை - அரை கப், பெரிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன், பொட்டுக் கடலை - 2 டீ ஸ்பூன், பச்சரிசி - 2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டீ ஸ்பூன்.
தாளிக்க : கடுகு- அரை டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன், பூண்டு - 3 பற்கள், எண்ணெய் - 1 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1
முருங்கைக் கீரை சாதம் செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவ வேண்டும்
மூன்றே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 2 விசில் வந்ததும் தீயை குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வையுங்கள். பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக நசுக்கி கொள்ளுங்கள்.
வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து, அதனை பொடியாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் தாளியுங்கள்.
பிறகு பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றை சோற்றில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், நெய்யையும் சேர்த்து ஒன்றாக கலந்து விடுங்கள். இப்போது சுவையான முருங்கை கீரை சாதம் ரெடி.
இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருள், முருங்கைக் கீரை. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடவேண்டிய உணவு இது. தவிர்க்காதீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"