Murungai Keerai Recipe, Murungai Keerai Sambar Making Tamil Video: முருங்கைக் கீரை இரும்புச் சந்து நிறைந்தது. எனவே வாரத்திற்கு இரு நாட்களாவது இதை பயன்படுத்துங்கள். இதைத் தேடி நீங்கள் மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில் வளர்க்க முடியும். அதற்கு வசதி இல்லாவிட்டால், அண்டை வீட்டில் முருங்கை மரம் நிற்கும். இந்தக் கீரையை பறிக்க யாரும் தடை சொல்லப் போவதில்லை.
Advertisment
முருங்கைக் கீரை கூட்டு, முருங்கைக் கீரை சூப் என பலரும் சாப்பிட்டிருப்பீர்கள். முருங்கைக் கீரை சாம்பார் சாப்பிட்டது உண்டா? அருமையான சுவையில் முருங்கைக் கீரை சாம்பார் செய்யும் முறையை இங்கு காணலாம்.
Murungai Keerai Sambar Making Tamil Video: முருங்கைக் கீரை சாம்பார்
முருங்கைக் கீரை சாம்பாருக்கு தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை - 3 கையளவு, சின்ன வெங்காயம் - 100 கிராம், பூண்டு - 10 பற்கள், அரிசி - 2 டீ ஸ்பூன், துவரம் பருப்பு - 2 டீ ஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, கடுகு - 1/2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப, மஞ்சள் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கு ஏற்ப, எண்ணெய் - 25 மிலி
முருங்கைக் கீரை செய்முறை :
முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து கொள்ளவும். அரிசி மற்றும் துவரம் பருப்பை சுரசுரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கொட்டி பொறிந்ததும் சின்ன வெங்காயம் சேர்க்கவும். பூண்டையும் தட்டிப்போட்டு வதக்கவும்.
பிறகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிண்டுங்கள். அரைத்து வைத்துள்ள பருப்பு, அரிசியில் தண்ணீர் ஒரு கிளாஸ் சேர்த்துக் கலந்து கடாயில் ஊற்றவும். பின்னர் நன்கு கொதிக்கவிடவும். பருப்பு மசியும் வாக்கில் கீரையை அலசி அதில் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். பின்னர் அதை கடையும் சட்டியில் கொட்டி நன்கு கடைந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும். கொதி நிலையை அடையும்போது அடுப்பை அணைத்து இறக்கிவிடவும். இப்போது சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயார்.
இது எளிதில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருள். மிஸ் பண்ணாதீங்க!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"