முருங்கை கீரையில் இப்படி துவயல் செய்யுங்க. சூப்பரான ரெசிபி.
தேவையான பொருட்கள்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
பூண்டு 5
இஞ்சி 1 துண்டு
6 வத்தல்
சிறிய அளவு புளி
2 கொத்து முருங்கைக் கீரை
அரை கப் தேங்காய்
பெருங்காயாம் கால் ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு சேர்க்கவும். இதை நன்றாக வறுக்க வேண்டும். நிறம் மாறியதும். பூண்டு, இஞ்சி சேர்க்கவும். தொடர்ந்து வத்தல் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து புளி, முருங்கை கீரை சேர்த்து வதக்கவும். வதங்கியதும், தேங்காய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இந்த கலவை ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். சூப்பரான முருங்கை கீரை துவயல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“