Advertisment

முருங்கை கீரையில் அவ்வளவு சத்து; கம்பு மாவு கலந்து இப்படி தோசை செய்திடுங்க

சத்தான முருங்கைக் கீரை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Sprouts dosa recipe

சத்தான முருங்கைக் கீரை தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கம்பு மாவு – 2 கப்
அரிசி மாவு – கால் கப்
உப்பு – தேவையான அளவு 
முருங்கைக்கீரை இலை – 1 கப் 
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப 

செய்முறை 

முதலில் பாத்திரம் எடுத்து அதில் அரிசி மாவு, கம்பு மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலக்கவும், தோசை மாவு பதம் இருந்தால் போதும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும். அடுத்து முருங்கைக் கீரை இலைகளை சிறிதாக நறுக்கி சேர்க்கவும். இதனை நன்கு கலந்துவிட்டு எப்போதும் போல் தோசை ஊற்றவும். சுவையான சத்தான, தோசை ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment