முருங்கைக்காயில் இப்படி ஒரு முறை தொக்கு செய்து பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
3 முருங்கைக்காய்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
½ ஸ்பூன் கடுகு
½ ஸ்பூன் சோம்பு
1 வெங்காயம்
ஒரு கைப்பிடி கருவேப்பிலை
1 தக்காளி
¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி
½ டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
½ டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி பொடி
1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
2 ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை: முருங்கைக்காய்யை 2 விசில் விட்டு வேக வைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து தக்காளி சேர்க்கவும். இதை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, சாம்பார் பொடி சேர்த்து வதக்க வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும். தொடர்ந்து அதில் வேக வைத்த முருங்கைக்காயின் சதைப் பகுதியை மட்டும் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். சுவையான முருங்கைக்காய் தொக்கு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“