சுவையான காளான் போண்டா ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
பட்டன் காளான்- 3 கப்
மைதா மாவு- 1/4 கப்
சோள மாவு- 1/4 கப்
மிளகாய்த் தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
வெங்காயம்- 1
உப்பு- தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
முதலில் காளான் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் காளான், வெங்காயம் சேர்த்து இதோடு மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையில் இருந்து சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெய்யில் சேர்த்து பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பாக பொரித்து எடுத்தால் சுவையான காளான் போண்டா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“