மங்களூர் ஸ்டைல் காளான் நெய் ரோஸ்ட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
கிராம்பு- 2
சோம்பு-1 ஸ்பூன்
பேப்ரிக்கா சில்லி- 20
வெங்காயம்- 2
பூண்டு- 10
தனியா- 1 ஸ்பூன்
மிளகு- கால் டீஸ்பூன்
சீரகம்- கால் டீஸ்பூன்
வெந்தயம்- சிறிதளவு
காளான்- கால் கிலோ
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
புளி- சிறிதளவு
வெல்லம்- சிறிதளவு
செய்முறை
முதலில் காளானை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சில்லி, வெங்காயம், தனியா, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு, வெந்தயம் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்துவிட வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் சிறிதளவு புளியை கரைத்து சேர்க்க வேண்டும். இப்போது லவை கொத்தவுடன் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அடுத்து காளானை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் சேர்க்கலாம். காளான் தண்ணீர் விடும் என்பதால் தேவையிருக்காது. அவ்வளவு தான் தண்ணீர் குறைந்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான காளான் நெய் ரோஸ்ட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“