செம்ம சுவையான மஷ்ரூம் கிரேவி. ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் – அரை கிலோ
2 வெங்காயம்
சின்ன துண்டு இஞ்சி
8 பூண்டு
ஒரு கைபிடி அளவு கொத்தமல்லி இலை அரைத்தது
உப்பு
2 தக்காளி
1 ½ மிளகாய் பொடி
2 ஸ்பூன் மல்லிப் பொடி
அரை ஸ்பூன் கரம் மசாலா
அரை ஸ்பூன் சீரகப் பொடி
உப்பு
5 ஸ்பூன் எண்ணெய்
2 ஸ்பூன் நெய்
செய்முறை : மஷ்ரூமை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் விட்டதும், அந்த தண்ணீர் ஆவியாகும் வரை வேக வைக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைக்கவும். மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, பூண்டை அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காய விழுதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். உப்பு சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளர வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் மஷ்ரூமை சேர்க்கவும்.