சுவையான பன்னீர் மஞ்சூரியன் வீட்டிலேயே செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் பொரிக்க
பன்னீர் - 400 கிராம்
மைதா - 2 ஸ்பூன்
சோள மாவு - 4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பன்னீர் மஞ்சூரியன் செய்ய
எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு, இஞ்சி- கால் கப்
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1/2 கப்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சோள மாவு கலவை - 1/2 கப்
வெங்காயத் தாள் வெங்காயம் - 2
வெங்காயத் தாள் கீரை - கால் கப்
செய்முறை
முதலில் பனீரை சதுர வடிவில் கட் செய்து எடுக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய பன்னீரை சேர்த்து கலக்கவும்.
இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் கலந்த பன்னீரை சேர்த்து பொரிக்கவும். இதையடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இதை தொடர்ந்து, தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் கலக்கவும். பின்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
சோளமாவை தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து, கலவையில் சேர்க்கவும். இதையடுத்து, பொரித்த பனீரை சேர்த்து கலந்து விட்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை தூவி விடவும். அவ்வளவு தான் சுவையான பனீர் மஞ்சூரியன் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“