சுவையான செட்டிநாடு காளான் மசாலா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
காளான் – 1 பாக்கெட்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுக்கவும். அடுத்து அதை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மீண்டும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா பொடி கலவையை சேர்த்து நன்றாக வதக்கி கொதிக்க விடவும். இப்போது தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக வைத்து எடுத்தால் செட்டிநாடு ஸ்டைல் காளான் மசாலா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“