சுவையான காளான் டிக்கா மசாலா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 2 கப்
குடை மிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
தயிர் – 1/4 கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கசூரி மெத்தி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி இரண்டாக நறுக்கி வைத்த காளான் போடவும்.
காளானில் இருந்து நீர் வெளியேறி வற்றியதும், அதில் முன்பு கலக்கி வைத்த தயிர், கடலை மாவு கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும். மசாலாவில் உள்ள பச்சை வாசனை நீங்கி, கிரேவி கெட்டியாக வர ஆரம்பிக்கும். அப்போது தேவையான அளவு உப்பு, கசூரி மெத்தி மற்றும் எலுமிச்சை சாற்றினைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காளான் டிக்கா மசாலா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“