சுவையான மஷ்ரூம் டிக்கா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான்- 200 கிராம்
குடைமிளகாய்- 1
வெங்காயம்- 1
வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு தேவையானவை
தயிர்- 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்- 1/4 டீஸ்பூன்
கடலை மாவு- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சீரகத் தூள்- 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- சிறிதளவு
செய்முறை
முதலில் மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் பிசைந்து வைக்கவும். காளானை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயத்தை நறுக்கி எடுக்க வேண்டும். தயார் செய்துள்ள மசாலாக் கலவையில் இப்போது நறுக்கி வைத்துள்ள காளான் வட்ட வடிவல் நறுக்கவும். காளான், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவைகளை நன்றாக பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து கிரில் குச்சி எடுத்து அதில் காளான், வெங்காயம், குடைமிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து கிரில் பேன் அல்லது எப்போதும் போல் தோசைக் கல் வைத்து வெண்ணெய் தடவி நாலா பக்கமும் திருப்பி வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் டிக்கா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“